tg travels

ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை கிடைத்த பின்னர் ஆடை தொழிற் சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது..


(மொஹொமட்  ஆஸிக்)

இலங்கைக்கு நிறுத்தப்பட்டிருந்த  ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை  நல்லாட்சி அரசின்  முயற்சியினால்  கிடைக்கப் பெற்றதன்  பின் ,  பின்தங்கி  இருந்த  ஆடை தொழிற் சாலைகள் மீண்டும்  இயங்க ஆரம்பித்துள்ளதாக   தபால்  சேவைகள்  மற்றும்  முஸ்லிம்  சமய  விவகார  அமைச்சர்  எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அக்குறணையில்  ஆடை தொழில்த் துறைக்கான  பயிற்சி  நிலையம்  ஒன்றை  இன்று 12 ம் தகதி ஆரம்பித்து வைத்ததன் பின்  அங்கு  இடம் பெற்ற  கூட்டத்தில்  உரையாற்றும்  போது  அவர்  இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும்  கருத்து  தெரிவித்த  அமைச்சர்  ஹலீம்  இவ்வாறும்  கூறினார்.

முன்னால் ஜனாதிபதி ரனசிங்க  பிரேமதாசவின்  காலத்தில் ஆடைத்  தொழில்  துறை  மிகவும்  முன்னேற்றமாக  இருந்தது.  நாடு முழுவதிழும்   அவர்  ஆடை தொழிற்  சாலைகளை  ஆரம்பித்தார். அதன் மூலம்  பல இலட்சக்கனக்கான இளைஞர் யுவதிகளுக்கு தொழல் வழங்கியதுடன்  பாரிய  அளவில் வெளி நாட்டு செலாபனியையும்  நாட்டுக்கு  தேடிக் கொடுத்தார்.

 இருந்த  போதும்  கடந்த  அர்சாங்கத்தின்  காலத்தில்  ஜீ.எஸ’.பீ  ப்லஸ்  சலுகை எமது நாட்டுக்கு  கிடைக்காமல் போனதன்  காரணமாக  ஆடைத்தொழிற்  சாலைகள்  மூடப்பட்டன. அதன் வருமானம் முழுமையாக  எங்களுக்கு கிடைக்காமல்  போய் விட்டது.

இருந்த போதும்  நல்லாட்சி அரசாங்கம் மேற் கொண்ட  சில முன்னேற்ற நடவடிக்கைகள்  காரணாமாக  ஜீ.எஸ்.பீ. ப்லஸ் சலுகை மீண்டும்  கிடைத்துள்ளதன்  காரணமாக  ஆடைத் தொழில் துறை மீண்டும்  ஆரம்பமாகி  வளர தொடங்கியுள்ளது.

2013 ம்  ஆண்டு முதல்  இது வரை  பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க வில்லை. எனவே  பட்டதாரிகளுக்கு  பாடசாலைகளில் நிலவுகின்ற  ஆசிரியர்  பற்றாக் குறையை  நீக்குவதற்காக ஆசிரியர்  நியமனங்கள் வழங்கவும்  அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது   என்றும்  அமைச்சர்  இங்க தெரிவித்தார்,.

2017 08 12  ஆஸிக் 
ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை கிடைத்த பின்னர் ஆடை தொழிற் சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.. ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகை கிடைத்த பின்னர் ஆடை தொழிற் சாலைகள் மீண்டும்  இயங்க ஆரம்பித்துள்ளது.. Reviewed by Madawala News on 8/12/2017 08:13:00 PM Rating: 5