Kidny

Kidny

இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ஹஜ் யாத்ரீகர்கள் சென்றடைந்தனர். (உலகம் முழுதும் இருந்து 20 இலட்சம்)


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

புனித மக்காவில் ஹஜ் கடமைகள் புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்றானது ஹஜ். ஹஜ்ஜின் முக்கிய கடமைகள் நாளை புதன் கிழமை முதல் தொடங்குகிறது. ஹஜ் செய்யும் புனித இடங்களான மினா அரஃபா ஆகிய பகுதிகளில் ஹஜ் யாத்ரீகர்கள் தங்குவதற்கான கூடாரங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரிவர செய்யபப்ட்டுள்ளன. செப்டம்பர் நான்காம் தேதி ஹஜ் கடமைகள் முழுமையடையும்.

இவ்வருடம் இந்தியாவிலிருந்து சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஹஜ் யாத்ரீகர்கள் மக்காவிற்கு வருகை புரிந்துள்ளனர். உலகம் முழுதும் இருந்து 20 இலட்சம் பேரும், வருகை புரிந்துள்ளனர். இவ்வருடம் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதும் அதற்காக பல பகுதிகளில் தண்ணீர் சாரல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ஹஜ் யாத்ரீகர்கள் சென்றடைந்தனர். (உலகம் முழுதும் இருந்து 20 இலட்சம்) இந்தியாவிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ஹஜ் யாத்ரீகர்கள் சென்றடைந்தனர். (உலகம் முழுதும் இருந்து 20 இலட்சம்) Reviewed by Madawala News on 8/29/2017 02:09:00 PM Rating: 5