Ad Space avaiable

அவையில் ஹிதாயத் சத்தாரை பேசவிடாது கூச்சல் குழப்பம் .

 
(ஜே.எம் . ஹபீஸ்)

மத்திய மாகாண சபை 55 நிமிடங்கள் மட்டுமே கூடி பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. (8.8.2017)

மத்திய மாகாண சபைத் தவைர் எல்.டி.சிமலசிரி தலைமையில் கூடிய போது முக்கிய முன்மொழிகள் மற்றும் தீர்மானங்கள் என்பன மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பகற்பெரஹரா இடம்பெறுவதன் காரணமாக சபையை ஒத்தி வைக்கும் படி கேட்கப்பட்டதற்கு இணங்க எதிர்வரும் 22ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


சபை அமர்வில் ஐ.தே.க. அங்கத்தவர் ஹிதாயத் சத்தார் உரையாற்றும் போது கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.

 அவர் தனது உரையில் தற்போதைய நல்லாட்சியில் எக்கட்சியைச் சேர்ந்தவர்களானாலும் திருடர்களுக்கு இடமில்லை என்றும் முன்னைய ஆட்சியில் திருடர்களுக்கே முன் உரிமை அளிக்கப்பட்டதாகவும் தற்போது சிறிய பிரச்சினைகளுக்கு பாரிய வடிவம் கொடுத்து தற்போதைய ஆட்சியை கொச்சைப் படுத்தும் செய்கைகள் நடப்பதாகவும், இந்த நல்லாட்சியில் தான் கோப் கமிட்டியின் தலைவராக வரலாற்றிலே முதன் முரையாக ஒரு எதிர்கட்சி உறுப்பினரை நியமித்துள்ளதோடு கடந்த மஹிந்த ஆட்சியிலே அவர்களின் அமைச்சர் ஒருவரை நியமித்தே களவுகளை மூடி மறைத்தீர்கள் மேலும்  இந்த நல்லாட்சி அரசாங்கம் சிறு மீன்களை போட்டு பெரிய மீன்களை அதாவது கடந்த அரசாங்கத்தின் பாடிய மோசடிகளை பிடிப்போம் என்று கூறினார்  இவர்  உரையாற்றும் போது இடையில் குறுக்கீடு செய்த ஐ.ம.சு.கூட்டமைப்பைச் சேர்ந்த ஏ.ஜே.சிரிசேன மற்றும் குனதிலக்க ராஜபக்ச ஆகியோர் பலத்த குரலில் குறுக்கீடு செய்து கொண்டே இருந்தனர். 


சளைக்காது ஹிதாயத் சத்ததாரும் பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஆனால் தெளிவாக எதனையும் கேட்க முடியவில்லை.

சற்று நேரத்தில் அமைதி ஏற்பட்டதும் மேற்படி ஒத்திவைப்புப் பிரேரனை முன்வைக்கப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது.


அவையில் ஹிதாயத் சத்தாரை பேசவிடாது கூச்சல் குழப்பம் . அவையில் ஹிதாயத் சத்தாரை பேசவிடாது கூச்சல் குழப்பம் . Reviewed by Madawala News on 8/08/2017 09:53:00 PM Rating: 5