tg travels

அடுத்த டெஸ்ட்டில் ரங்கன ஹேரத்தும் இல்லை ? ஆனால் சந்திமால் களமிறங்குவார்.


இந்தியா-இலங்கை அணிகளுக்கி டையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுகயினம் காரணமாக முதல் போட்டி யில் விளையாடாத இலங்கையணித் தலைவர் தினேஷ் சந்திமால் இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முதல் போட்டி யில் காயமடைந்த சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், இரண்டாவது போட்டியில் களமிறங்குவது சற்றுச் சந்தேகமானது எனவும் தெரிவிக்கப் படுகிறது.

இவ்விடயம் குறித்து இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவரும் முகாமையாளருமான அசங்க குருசிங்ஹ தெரிவிக்கையில், சந்திமால் கடந்த சில தினங்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். எனவே, அடுத்த போட்டியில் பங் கேற்கும் உடல்தகுதியுடன் உள்ளார்.

ஹேரத்தின் விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாகக் குணம டையாததால், எதிர்வரும் நாட்க ளில் அவரின் முன்னேற்றத்தைப் பொறுத்து போட்டியில் விளையா டக்கூடிய வாய்ப்பு உண்டு" என்றார்.

இதேவேளை, காயமடைந்துள்ள அசேல குணரத்னவுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அணியில் உள் வாங்கப்பட்டுள்ளார்.

சந்திமால் மீண்டும் அணிக்கு வருவதால் தனுஷ்க குணதிலக அணியை விட்டு
வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. ஆனாலும், தனஞ்சய அல்லது தனுஷ்க இவர்களில் ஒருவரே அணியில் இடம்பிடிப்பர் எனவும் குருசிங்க குறிப்பிட்டார்.

அடுத்த டெஸ்ட்டில் ரங்கன ஹேரத்தும் இல்லை ? ஆனால் சந்திமால் களமிறங்குவார். அடுத்த டெஸ்ட்டில் ரங்கன ஹேரத்தும் இல்லை ? ஆனால் சந்திமால் களமிறங்குவார். Reviewed by Madawala News on 8/01/2017 10:35:00 AM Rating: 5