Kidny

Kidny

கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு. #இலங்கை


கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்த குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்  காரைநகர் வியாவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் மதியவேளையில் அதேபகுதியிலுள்ள ஊரவரொருவரின் அந்தியேட்டி நிகழ்வொன்றிற்குச் சென்று விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கடும் வெப்பம் காரணமாகத் திடீரென மயங்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து வீதியால் போக்குவரத்துச் செய்தவர்களினால் மீட்கப்பட்டு, காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே பகுதியைச் சேர்ந்த நாகமணி நாகராஜா (வயது-53) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு. #இலங்கை கடும் வெப்பம் காரணமாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு. #இலங்கை Reviewed by Madawala News on 8/27/2017 12:26:00 PM Rating: 5