Kidny

Kidny

ICTA பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜினாமா ! பின்னணியில் மஹாராஜா ஸ்பெக்ரம் விவகாரம்..

 

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ( ICTA ) பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளரான முகுந்தன் கனகே, தன்னுடைய பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.  

தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை, தன்னுடைய உயர் முகாமைத்துவத்துக்கு, கடந்த 11ஆம் திகதியன்று அனுப்பிவைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், வேண்டுகோளுக்கு அமையவே, அப்பதவிகளை அவர் இராஜினாமா செய்துகொண்டதாக அறியமுடிகிறது.    

25 மில்லியன் ரூபா பொருமதியான ஸ்பெக்றம் ஒன்றை மகாராஜா நிறுவனத்திற்கு எதுவித விலை மனுகோரலும் இல்லாமல் பெற்றுக்கொடுத்தமைக்கு எதிராக கேள்வி எழுப்பியதை தொடர்ந்தே தனக்கு இந்த பதவியை விட்டு செல்லவேண்டி ஏற்பட்டுள்ளதாக முகுந்தன் கனகே தனது உத்தியோகபூர்வ முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

ICTA பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜினாமா ! பின்னணியில் மஹாராஜா ஸ்பெக்ரம் விவகாரம்.. ICTA பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜினாமா ! பின்னணியில் மஹாராஜா ஸ்பெக்ரம் விவகாரம்.. Reviewed by Madawala News on 8/15/2017 12:29:00 PM Rating: 5