Kidny

Kidny

சுதந்திர தினத்தை கொண்டாட செல்லும் வழியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.


பாடசாலையில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பாரத தேசத்தையே சுதந்திர தினத்தில்  அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை தனது பாடசாலையில் நடைபெற்ற இந்தியாவின் 71வது சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 8.15 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி ஒருத்தியை பின்தொடர்ந்து வந்த 40 வயது மனிதன் சிறுமியை கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக சண்டிகாராஹ் நகர சீனியர் சுப்ரிண்டன்ட் ஒப் பொலிஸ் ஈசா சிங்கால் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சண்டிகாராஹ் நகர அரச பாடசாலை ஒன்றில் தரம் 8ல் கல்வி கற்கும் சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படிருப்பதாக கூறப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.

தன்னை கடத்தியவனின் அடையாளங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் சிறுமி வழங்கியிருக்கும் வாக்குமூலத்தை அடுத்து சந்தேக நபரை தேடிக்கொண்டிருப்பதாக ஈசா சிங் மேலும் தெரிவித்துள்ளார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் இருக்கும் இடங்களில் இருந்து சி சி டி வி கெமராவின் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஹரியானா மாநில சீப் ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவரின்
 29 வயதான மகள் ஒருவர் ஹரியானா மாநில பீ ஜே பி தலைவர் ஒருவரின் மகனினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்தப்பட்டு ஒருவாரம் கழிந்த நிலையில் இடம்பெற்றிருக்கும் மற்றுமொரு சம்பவமான இது இந்திய மக்களிடையே பலத்த எதிர்ப்பலைகளையும் ஆக்ரோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
சுதந்திர தினத்தை கொண்டாட செல்லும் வழியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். சுதந்திர தினத்தை கொண்டாட செல்லும் வழியில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம். Reviewed by Madawala News on 8/15/2017 09:26:00 PM Rating: 5