Ad Space Available here

நேற்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷவிடம் பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் முழு விபரம்...


(எம்.எப்.எம்.பஸிர்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மூன்றரை மணி நேரம் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டனர்.

செஞ்சிலுவை சங்கத்தினால் முன்னாள் முதற் பெண்மணி விரந்தி ராஜபக்ஷவின் 'சிரிலிய சவிய அமைப்புக்கு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட் டுப்பாட்டில் இருந்த (WP) KA0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை முன்னிறுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவு தீவிர விசாரணைகளை  முன்னெடுத்ததாகவும், இதன் போது விசேட வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்த பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷவை அங் கிருந்து வெளியேறிச் செல்ல அனுமதித் ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.


இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் ஷிரந்தி மஹிந்த தம்பதியின் இரண்டாவது புதல் வரான யோஷித்த ராஜபக்ஷவை விசா ரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும், அது தொடர்பில் அவருக்கு அறிவித்தல் விடுக் கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார். 'சிரிலிய சவிய அமைப்பின் கீழ் பாவ னையிலிருந்த செஞ்சிலுவை சங்கத் தினால் வழங்கப்பட்ட டிபண்டர் வாகனம் தொடர்பில் பிரத்தியேக விசாரணை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெ டுக்கப்பட்டுள்ளது.


குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் நேரடி மேற்பார்வையில் அதன் பணிப் பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் நாகஹமுல்ல, பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேகர ஆகியோரின் நேரடி கட்டுப் பாட்டில் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரி சோதகர் ரஞ்சித் முனசிங்க தலைமையி லான பொலிஸ் குழுவினரால் இந்த விசார ணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் நேற்று அது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்த 'சிரிலிய சவிய அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப் புக்கு இணங்க அவர் நேற்று காலை 9.30 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ ரானார்.

தனது இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்படுத்திய பின்னர், தனது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, மகனான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, சட்டத்தரணி பிரேமநாத் தொல வத்த ஆகியோர் சகிதம் ஷிரந்தி ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.

இதன் போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகம் முன்பாக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக் கணக்கான பெண்கள் ஒன்று கூடினர். அவர்கள் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆதர வான கோஷங்களை எழுப்பி, ஷிரந்திக்கு எதிரான விசாரணைகள் அரசியல் பழி வாங்கல் என தெரிவித்தனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பான சூழல் நேற்று முற் பகல் முதல் பிற்பகல் 1.30 மணி வரை நில விய நிலையில், பிரதேசத்தின் பாதைகள் பல மூடப்பட்டு, அவசர நிலைமையை கையாளத்தக்க வகையில் பொலிஸாரும் கலகமடக்கும் பொலிஸாரும் ஸ்தலத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.


இந் நிலையில் அவசியம் ஏற்படும் போது பயன்படுத்த பொலிஸ் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. 'ஷிரந்தி மெடமை விட்டுவிட்டு போக மாட்டோம்' எனவும், தற்போதைய விகாரம ஹாதேவியான ஷிரந்தியை பழி வாங்காதே எனவும் அங்கு கூடியிருந்தோர் கோஷங் களை எழுப்பினர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் களான கெஹெலிய ரம்புக்வெல்ல, பந் துல குணவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ்,முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்டோர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகியிருந்தனர்.

இந் நிலையிலேயே நேற்று முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 1.15 வரை ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டு விசேட வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது. கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணையில் உள்ள குறித்த டிபண்டர் வாகனம் தொடர்பிலான வழக்கில், இதற்கு முன்னர் செஞ்சிலுவை சங்க உயர் அதி காரிகள் பலரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியி ருந்தனர்.

இதன்போது, குறித்த டிபண்டர் வாகனம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 'சிரிலிய சவிய' எனும் அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அந்த வாகனத்தை எதற்கு, எப்படி பயன் படுத்தினர் என்பது தமக்கு தெரியாது என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் செஞ்சிலுவை சங்கத் தினர் வழங்கும் போது இருந்த நிறம் பின்னர்மாற்றப்பட்டுள்ளமையைக் கண்டறிந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதற் கான காரணத்தையும் கண்டறிய விசார ணைகளை ஆரம்பித்தனர்.


இதன் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர் பிலான விசாரணை பிரிவு முன்னெடுக்கும் வஸிம் தாஜுதீன் படு கொலை வழக்கு தொடர்பிலான விசாரணைகளில், வஸிம் தாஜுதீனின் கொலையுடன் டிபண்டர் வாகனம் ஒன்று தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டிருந்தன. எனினும் அந்த டிபண்டர் வாகனம் எது என துல்லியமாக தெரியவ ராத நிலையில், 'சிரிலிய சவிய அமைப்பின் கீழ் இருந்த குறித்த டிபண்டர் வாகனமே அது என பல தரப்பினராலும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 'சிரிலிய சவிய டிபண்டர் வாகனம் ஷிரந்தியின் பாதுகாப்பு பிரிவி னரால் பயன்படுத்தப்பட்டமை,வசீமின்  கொலை தொடர்பில் ஜனாதிபதி பாது காப்பு பிரிவினர் சிலர் மீது திரும்பியுள்ள அவதானம், வஸிமின் கொலையைத் தொடர்ந்து குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை போன்ற விட யங்களை மையப்படுத்தி இந்த டிபண்டர் வஸிம் தாஜுதீன் கொலையுடன் இணைத்து பேசப்பட்டது. இந் நிலையிலேயே நேற்று குற்றப் புல னாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட ஷிரந் தியிடம் குறித்த டிபண்டர் வாகனத்தின் நிறம் மாற்றப்பட்டமை மற்றும் அதன் நோக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்ட தாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நேற்று சிறப்பு வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர், அவசியம் ஏற்படும் பட்சத்தில மீள் விசார ணைக்கு அழைப்பதாக கூறி அவர் விடுவிக் கப்பட்டதுடன், அவரது வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக் கப்படவுள்ளன. இந்நிலையில் இன்று விரந் தியின் இரண்டாவது மகனும்,  குறித்த டிபண்டர் வாகனம் தொடர்பில் தகவல் அறிந்தவர் மற்றும் அதனை சிறிது காலம் பயன்படுத்தியவர் எனவும் நம்பப்படும் யோஷித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய் வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கனிஷ்ட புதல்வரான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நேற்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு சுமார் 6 மணி நேரம் விசேட விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துகொண்டது.

சீனாவில் இருந்து விண்ணுக்கு ஏவப் பட்டதாக கூறப்படும் சுப்ரிம் செட் 1
எனும் செயற்கைக் கோள் தொடர்பிலும் அந்த திட்டத்தை முன்னெடுத்த சுப்ரீம் செட் எனும் நிறுவனத் துடன் தொடர்புபட்ட 320 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் ஒன்று தொடர்பிலும் இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

 நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் காலை 9.15 மணியளவில் ஆஜரான ரோஹித்த ராஜ பக்ஷவிடம் பிற்பகல் 3.00 மணியையும் தாண்டி இந்த விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், அவசியம் ஏற்படும் இடத்து மீள விசாரணைக்கு அழைப்பதாக அறி வுறுத்திய அவர் விடுவிக்கப் பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.

சீனாவில் இருந்து விண்ணுக்கு சுப்ரிம் செட் 1 எனும் செய்மதி ஏவப்பட்டிருந்தது. இந்த செய்மதி சுப்ரீம் செட் எனும் நிறுவ னத்தின்நடவடிக்கைகாரணமாகஏவப்பட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் நிறை வேற்று பொறியியலாளராக ரோஹித்த ராஜபக்ஷ கடமையாற்றியிருந்தார்.

அத்துடன் அந் நிறுவனத்தின் பங்கு தாரராகவும் ரோஹித்த ராஜபக்ஷ செயற்பட்ட நிலையி லேயே, அவரிடம் அது தொடர்பில் விசா ரணை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த செய்மதி திட்டம் 320 மில்லியன் ரூபா வரையிலான பெரும் தொகை பணம் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட் டுள்ள நிலையில் அதன் போது இடம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் விதமாக இந்த விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


அதன்படி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங் காரவின் மேற்பார்வையில் அதன் பணிப் பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரி யந்தவின் கட்டுப்பாட்டில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர பிரே மரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவி னரால் இது தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டன.


நேற்று தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தாயாரான ஷிரந்தி ராஜபக்ஷ, சகோதரர்களான நாமல் மற்றும் யோசித்த ஆகியோருடன் கோட் டையில் உள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு வருகை தந்த ரோஹித்த ராஜபக்ஷ, அவரது சட்டத்தரணி யான சம்பத் மெண்டிஸுடன் விசாரணை யாளர்களை எதிர்கொண்டார். இதன்போது காலை 9.15 முதல் பிற் பகல் மூன்று 15 வரையில் ரோஹித்த ராஜ பக்ஷவிடம் விசாரணையாளர்கள் சுப்ரிம் செட் 1 செய்மதி திட்டம் தொடர்பில் கேள் விகளை எழுப்பியிருந்தனர். குறிப்பாக அத் திட்டத்தின் பின்னணி, அதற்கான செலவினங்கள், பணம் திரட்டப்பட்ட முறைமை உள்ளிட்டவை தொடர்பில் விசேட அவ தானம் செலுத்தப்பட்டதாக விசாரணைக ளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ரோஹித்த ராஜபக்ஷவி னால் நிதிக் குற்றப் புலனாய்வு விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவல்கள். மற்றும் வாக்குமூலத்தை மையப்படுத்தி அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் ரோஹித்தவை மீள விசாரணை செய்ய எதிர்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். நேற்றைய விசாரணைகளின் போது குறிப் பாக 2012 நவம்பர் மாதம் அளவில் விண் ணுக்கு ஏவப்பட்ட குறித்த செய்மதியினை தயாரிக்கவும் ஏவவும் பாதுகாப்பு அமைச்சு, தொலைதொடர்புகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டமுறைமைகள் மற்றும் நிதிகையாளப்பட்டவிதம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருந்ததாக எப். சி.ஐ.டி அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.


நேற்று ரோஹித்த மீதான விசாரணைகள் இடம்பெறும் போது அப்பகுதிக்கு, மஹிந்த ஷிரந்தி தம்பதிக்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜிஎல். பீரிஸ் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.


நேற்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷவிடம் பல மணித்தியாலங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் முழு விபரம்... நேற்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷவிடம் பல மணித்தியாலங்கள்  இடம்பெற்ற விசாரணைகளின் முழு விபரம்... Reviewed by Madawala News on 8/16/2017 10:41:00 AM Rating: 5