Kidny

Kidny

இறக்காமத்து இளைஞர்களால் மாபெரும் இரத்த தான நிகழ்வு !



‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளின் கீழ் இறக்காமம் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்த தான நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் 9.00am - 2.00pm மணி வரை நடைபெறவுள்ளது.

இறக்காமம் அனைத்து பள்ளிவாசல்கள் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் இளைஞர் கழகங்கள் என்பவற்றின் ஒத்துழைப்புடனும் மூவின மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் முதற்தடவையாக அம்பாரை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு  வழங்கும் நோக்குடன் இறக்காமம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறக்காமத்து இளைஞர்களால் மாபெரும் இரத்த தான நிகழ்வு ! இறக்காமத்து இளைஞர்களால் மாபெரும் இரத்த தான நிகழ்வு ! Reviewed by Madawala News on 8/18/2017 10:36:00 AM Rating: 5