Kidny

Kidny

கைகுலுக்கி கட்டித்தழுவிய ஈரான் - சவூதி அமைச்சர்கள்.


அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி அண்மையில் இடம்பெற்றுவரும் பதற்ற சூழல் குறித்து துருக்கியில் இடம்பெற்ற உலக முஸ்லிம் நாடு களின் மாநாட்டில் சவூதி அரேபிய மற்றும் ஈரான் வெளியுறவு அமைச் சர்கள் சந்தித்து கைகுலுக்கிக் கொண் டனர்.

ஈரான் மற்றும் சவூதிக்கு இடை யிலான முறுகல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


இதன்போது சவூதி வெளியுறவு அமைச்சர் அதெல் அல் ஜுபை, ஈரான் வெளியுறவு அமைச்சரை அணுகி கைலாகு கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் கட்டித்தழுவிக் கொண்டனர்.இதனைஅடுத்துஇருவ ரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத் தியுள்ளனர்.

எனினும் இந்த சந்திப்பு இராஜதந்திர விதிமுறைகளை பின்பற்றி சாதா ரணமாக நடைபெறும் ஒன்று என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப் பிட்டுள்ளார். பலஸ்தீன விவகாரம் குறித்து இஸ் லாமிய ஒத்துழைப்பு கவுன்ஸில் ஏற்பாடு செய்த மாநாடே ஸ்தன்பூல் நகரில் நடைபெற்றது.

கைகுலுக்கி கட்டித்தழுவிய ஈரான் - சவூதி அமைச்சர்கள். கைகுலுக்கி கட்டித்தழுவிய ஈரான் - சவூதி அமைச்சர்கள். Reviewed by Madawala News on 8/03/2017 10:23:00 AM Rating: 5