Kidny

Kidny

கட்டார், ஈரானுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்துகிறது.


ஈரானுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை கட்டார் மீண்டும் ஏற்படுத்தவுள்ளது. ஈரானுக்கான கட்டார் தூதுவர் 20 மாதங்களுக்கு பின் மீண்டும் டெஹ்ரான் திரும்பவுள்ளதாக கட்டார் அரசு அறிவித்துள்ளது.

http://abcnews.go.com/International/wireStory/latest-qatar-foreign-minister-spoke-irans-fm-49391905

சவூதி அரேபியா அந்நாட்டு ஷியா மத குரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை பின் ஈரானுடன் ஏற்பட்ட இராஜதந்திர மோதலை அடுத்தே கட்டார் தனது ஈரான் தூதுவரை திரும்ப அழைத்திருந்தது.

கட்டார் வெளியுறவு அமைச்சு நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கட்டார் தூதுவர் தனது இராஜதந்திர பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தூதுவர் ஈரான் திரும்பும் விபரம் பற்றி கட்டார் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவது குறித்து கட்டார் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடலும் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவுடன் ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர மற்றும் போக்குவரத்து உறவுகளை துண்டித்திருக்கும் நிலையிலேயே கட்டார், ஈரானை நெருங்குகிறது.

கட்டார் தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் தீவிரவாதத்திற்கு உதவுவதாகவும் அண்டை நாடுகள் குற்றம் சாட்டியபோதும் கட்டார் அதனை மறுத்து வருகிறது.

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா துண்டித்ததை அடுத்தே கட்டாரும் கடந்த ஆண்டு ஜனவரியில் தனது ஈரான் நாட்டுக்கான தூதுவரை திரும்ப அழைத்துக் கொண்டது.

அண்டை நாடுகள் கட்டாருக்கான விநியோகப்பாதைகளை துண்டித்ததை அடுத்து ஈரானே கட்டாருக்கு உணவு விநியோகங்களை வழங்கியதோடு தனது வான் பரப்பை பயன்படுத்த காட்டார் விமானங்களுக்கு அனுமதி அளித்தது.
கட்டார், ஈரானுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்துகிறது.  கட்டார், ஈரானுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை  மீண்டும் ஏற்படுத்துகிறது. Reviewed by Madawala News on 8/25/2017 01:37:00 PM Rating: 5