Kidny

Kidny

இலங்கை ஹாஜிகளுக்கு ஜித்தா விமான நிலையத்தில் விசேட ஒழுங்குகள்.


இக்பால் அலி
இன்றுடன் ஜித்தா விமான நிலையத்தில் 745 ஹாஜிகள்  வருகை தந்துள்ளனர். 

மொத்தமாக உலக நாடுகளிருந்து இதுவரை 115600 ஹாஜிகள் வருகை, பாதுகாப்பு சுகாதார வசதிகள் ஒழுங்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.


இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா செல்லும் ஹஜ் யாத்திரையாளர்களை வரவேற்பதற்காக ஜித்தா விமான நிலையத்தில்  சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராயம் விசேட ஒழுங்குகள் செய்துள்ளன.


இலங்கையிலிருந்து இதுவரை இன்று  வித்தா விமான நிலையத்திற்கு 745 பேர் வரை வருகை தந்துள்ளனர்.

 உலக நாடுகளிலிருந்து இதுவரை  மொத்தமாக 115600 ஹாஜிகள் வருகை தந்துள்ளனர். பாதுகாப்பு சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுராலயத்தின் தூதுவர் அஸ்மி தாசிம் பதில் கவுன்ஸிலர் ஜெனரல் எஸ் எல். கே. நியாஸ், மொழி பெயர்ப்பு அதிகாரி நளீர், மற்றும் ஜித்தா விமான நிலைய அதிகாரி ரிழ்வான் ஹனிபா மற்றும் தூதுவராக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பல அதிகாரிகள் களத்தில் இறங்கி நேரடியாகவே இந்த  உதவிகளைச் செய்து வருகின்றனர்.


விமானத்த்தில் கொண்டு வரும் பேக் பொதிகளை இலகுவாக எடுத்துக் கொடுத்தல், வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல் மருத்துவ சேவை, மேலதிக அனைத்து சேவைகளையும் துரிதமாக களத்தில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.


புனித ஹஜ் யாத்திரைகாக முதலாவது ஹஜ் யாத்திரை குழுவினர் கடந்த ஞாயிற்க் கிழமை 6-7-2017 ஆம் திகதி  முதல் 27 ஆம் திகதி வரை ஹஜ் யாத்திரையாளர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹஜ் யாத்திரையளர்கள் ஜித்தா நோக்கி விமான நிலையம்  சென்ற வண்ணம் உள்ளனர்.


இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் கடமைக்காக 2840  வரை செல்லவுள்ளனர்.

அதேவேளை கட்டுநாயாக்க விமானத்திலிருந்து செல்லும் ஐந்து கென்டனர் லெகேஜ் உடன் செல்லாத காரணத்தினால் சுமார் 86 பேக் வரவில்லை.

 அதில் 60 ஹாஜிகள் பேக்கள் இன்றி உள்ளனர். அதில்  30 பேர் அளவில் ஹாஜிகள் வெறும் இஹ்ராம் உடையில்தான் சென்றுள்ளனர். அதனைப் பெற்று மக்காவில் ஹாஜிகள் தங்கியிருக்கின்ற ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

 
எனினும் ஹாஜிகள் வரும் போது கையில் கொண்டு வரும் பொதிகளின் அளவுக்கு தங்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்வது அவசியம் எனவும் அதேநேரம் சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்ட மருந்து வகைகளை எடுத்து வர வேண்டாம் எனவும் ஒரு சில உடுப்புகளையும் அதில் எடுத்து வர வேண்டும் எனவும்;  ஏற்கெனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட விடயம்.

 எனினும் இலங்கையிலிருந்து வருகை தரும் ஹாஜிகள் இது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இக்பால் அலி
10-8-2017
 

இலங்கை ஹாஜிகளுக்கு ஜித்தா விமான நிலையத்தில் விசேட ஒழுங்குகள். இலங்கை ஹாஜிகளுக்கு ஜித்தா விமான நிலையத்தில் விசேட ஒழுங்குகள். Reviewed by Madawala News on 8/10/2017 08:52:00 PM Rating: 5