Ad Space Available here

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக அடுத்த மாதம் நம்­பி­கை­யில்லா பிரே­ரணை .


மஹிந்­த­வுடன் இணைந்து போட்­டி­யிட்டு இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்­தில்­
அ­மர்ந்­துள்ள பலர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் மீண்டும் எம்­முடன் இணை­வார்கள். மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில் அமர்­வார்கள். அவர்கள் தவிர்ந்த வேறு எவ­ருக்கும் எமது அணியில் இட­மில்லை என்று பொது எதி­ரணியினர் தெரி­வித்­தனர்.

ராஜி­தவை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக அடுத்த மாதம் நம்­பி­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்படவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் குறித்தும், பொது எதி­ர­ணியின் அடுத்­த­கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் வின­விய போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர். இது குறித்து பொது எதி­ரணி உறுப்­பினர் சமல் ராஜபக்ஷ கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டு மக்கள் நல்­லாட்­சியை ஆத­ரிப்­ப­தாக கூறு­கின்­றனர். அப்­படி ஆத­ரிக்கும் மக்கள் ஒரு­போதும் இந்த நாட்­டினை சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைக்குள் உட்­ப­டுத்த வாக்­க­ளிக்­க­வில்லை. சீனாவும், இந்­தி­யாவும்

 இலங்­கையை பங்­கு­போட இட­ம­ளிக்கும் உடன்­ப­டிக்­கைக்கு மக்கள் வாக்­க­ளிக்­க­வில்லை. இன்று நாட்டின் நிலங்கள் எவையும் இலங்­கையின் வியா­பா­ரி­க­ளுக்கு கொடுக்­க­ப்படவில்லை. இங்கு வியா­பாரம் செய்யும் நபர்கள் உள்­ளனர். ஆனால் மாறாக சர்­வ­தேச நாடு­க­ளுக்கு மட்­டுமே இந்த வளங்கள் விற்க்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு சர்­வ­தேச நாடு­க­ளுடன் செய்­து­கொள்ளும் உடன்­ப­டிக்கை குறித்து நாம் முதலில் ஆராய வேண்டும். இந்த உடன்­ப­டிக்கை மூல­மாக எவ்­வா­றான நலன்­களை நாம் பெற்­றுக்­கொள்ள முடியும். எமக்கு சாத­க­மாக இவை அமை­கின்­றதா? என்­பது குறித்து ஆராய வேண்டும். 99 ஆண்­டு­க­ளுக்கு உடன்­ப­டிக்கை செய்­து­கொ­டுத்தால் எமது நான்கு பரம்­ப­ரைகள் அழிந்­து­விடும்.

இவ்­வாறு மோச­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தால் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் வராமல் இருக்க வாய்ப்­பில்லை. எமது இளம் சமூகம் தமது உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள மீண்டும் ஆயுதம் ஏந்­தவோ உயிர் தியாகம் செய்து கைப்­பற்­றவோ போர­டி­யாக வேண்­டிய நிலைமை வரும்.

இதனால் எமது மக்­களே அழி­யப்­போ­கின்­றனர். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு கொடுத்­து­விட்டு மத்­தள விமா­ன­நி­லை­யத்தை இந்­தி­யா­விற்கு கொடுக்­கின்­றனர். இவ்­வாறு முரண்­பட்ட இரண்டு நாடு­களும் இலங்­கையை பங்கு போடும் அள­விற்கு இட­ம­ளித்தால் இலங்கை அழி­வது உறு­தி­யா­கி­விடும். தெற்கை சீனா­விற்கு கொடுத்­து­விட்டு இந்­தி­யாவை திருப்­திப்­ப­டுத்த வடக்கை தாரை­வார்த்துக் கொடுக்­கின்­றனர். இது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்கை அல்ல.

ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கூட்­டணி அர­சாங்­கத்தின் மோச­மான வேலைத்­திட்­டங்­க­ளுக்கு இணக்கம் தெரி­விக்­கவோ அல்­லது அமை­தி­யாக இருந்து வேடிக்கை பார்க்­கவோ எம்மால் முடி­யாது. நாம் எமது நாட்டை மீட்­டெ­டுக்க போராடி வரு­கின்றோம். அதற்­கா­கவே நாம் முரண்­பட்டு வரு­கின்றோம். இதில் நாம் பொது எதி­ர­ணி­யாக செயற்­ப­டவே விரும்­பு­கின்றோம் என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சித் சொய்சா தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 66 ஆவது மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் பண்­டா­ர­நா­யக்­கவின் புகைப்­ப­டத்தை பதித்து விளம்­ப­ரப்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்கை இல்லை. முழு­மை­யாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்கை பரப்­பப்­பட்­டுள்­ளது.

இவர்கள் அனை­வரும் இணைந்து இன்று மீண்டும் நாட்டில் யுத்­தத்தை உரு­வாக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இப்­போது உரு­வாக்­கப்­படும் அர­சியல் அமைப்பு திட்டம் மூலம் மீண்டும் ஒரு யுத்­தத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்­கின்­றனர்.

நாட்டை துண்­டாடும் நட­வ­டிக்­கை­களை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். மறு­புறம் எட்கா உடன்­ப­டிக்கை செய்து நாட்டின் பொரு­ளா­த­ரத்தை அழிக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். நாட்டின் வளங்­களை விற்­கின்­றனர். இவற்றை எதிர்க்கும் சரி­யான கொள்­கையில் நாம் உள்ளோம்.

நாம் ஐக்­கிய தேசியக் கட்சி எதிர்ப்பு கொள்­கையில் உள்ளோம். மஹிந்த ராஜபக் ஷவின் தலை­மைத்­த­வத்தில் நாம் ஆட்­சியை கைப்­பற்றும் நோக்­கத்தில் உள்ளோம். ராஜித சேனா­ரத்ன எம்மை வீழ்த்த முயற்­சித்து வரு­கின்றார். உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் பொது எதி­ர­ணியின் பலத்தை வீழ்த்தும் வியூ­கத்தை வகுப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

எம் அனை­வ­ரையும் சிறை­களில் அடைத்து தண்­டிப்­ப­தாக கூறு­கின்­றனர். முடிந்தால் எம்மை சிறை­களில் அடை­யுங்கள். எம்மை சிறை­களில் அடைத்­தாலும் நாம் நல்­லாட்­சியை வீழ்த்­துவோம். மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியை உரு­வாக்­குவோம். அதேபோல் எமது ஆட்­சியில் ஒரு­போதும் இவர்­க­ளுக்கு இட­ம­ளிக்க போவ­தில்லை என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜானக வத்­கும்­புற கூறு­கையில்,

அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விற்கு எதி­ராக கொண்­டுவந்துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை வெற்­றி­பெ­றப்­போ­வ­தில்லை என்­பது எமக்கு தெரியும். 113 வாக்­கு­களை பெறாது என்­பதும் எமக்கு தெரியும். எனினும் ராஜித யார் என்­பதை உல­குக்கு எடுத்­துக்­காட்டும் ஒரு நகர்­வா­கவே இதனை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அடுத்­த­தாக பிர­தமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம். சரியாக நாட்கணக்கு எண்ணி ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை பொது எதிரணி கொண்டுவரும்.அதில் மாற்றம் இல்லை. அடுத்த மாதம் இது நடக்கும் என நாம் நம்புகின்றோம்.

எம்முடன் இணைந்து போட்டியிட்டு இன்று அரசாங்கத்தில் உள்ள பலர் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் மீண்டும் எம்முடன் இணைந்து மஹிந்த ராஜபக் ஷவின் அடுத்த பயணத்தில் இணைவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக அடுத்த மாதம் நம்­பி­கை­யில்லா பிரே­ரணை . ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக அடுத்த மாதம் நம்­பி­கை­யில்லா பிரே­ரணை . Reviewed by Madawala News on 8/28/2017 01:57:00 PM Rating: 5