Kidny

Kidny

கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஜனாதிபதியுடன் சேர்ந்தார்.


கூட்டு எதிர்க் கட்சியின் பிரதான உறுப்பினர்களுள் ஒருவரான பண்டாரகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சஞ்சய ஹெட்டிகே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் செயற்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (25) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தார்.


நாட்டிற்கு தேவையான அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களுடன் நாட்டை பேண்தகு அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்களுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தான் செயற்படவிருப்பதாக அவர் இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. D C
கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஜனாதிபதியுடன் சேர்ந்தார். கூட்டு எதிர்க் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஜனாதிபதியுடன் சேர்ந்தார். Reviewed by Madawala News on 8/25/2017 04:22:00 PM Rating: 5