tg travels

இரத்தினபுரியில் மாணிக்கக்கல் வர்த்தகரின் மனைவி கடத்திச் செல்லப்பட்ட சம்பவம்.. 4 நாட்களாக CCTV க்கள் மூலம் தேடுதல் நடத்தியும் பலன் இல்லை.

 
இரத்தினபுரி நவநகரத்தில் வசித்து வந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கடந்த 4 நாட்களாக தேடுதல் நடத்தியும் இதுவரை எவரும் கைது செய்யப்பட வில்லையெனவும் சந்தேகத்துக்குரிய முச்சக்கர வண்டியொன்று சாரதியு டன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 27 ஆம் திகதி இரத்தினக்கல் வர்த்தகர் தனது புதல்வியுடன் வெளியே சென்ற சந்தர்ப்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவியான 34 வயதுடைய விஷாகா சுதர்ஷனி என்பவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது கணவரான இரத்தினக்கல் வர்த்தகர் சுரேஷ் கமகே இரத்தினபுரி பொலிஸ் நி லையத்தில் செய்துள்ள முறைப் பாட்டுக்கிணங்க இந்த விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சம்பவ தினம் காலை 7.30 மணிய ளவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்ப டும் இச்சம்பவம் தொடர்பில் கிடைக் கப்பெற்ற சாட்சிகள் மற்றும் சீ.சீ.டீ வீ வீடியோ பதிவுகள் மூலம் சந்தே கத்துக்கி டமான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் இவர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியென ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவ தாகவும் பல முனைகளில் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்ற போதிலும் சந்தேகத்துக்கிடமான வேறு எவரும்  செய்யப்பப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.


சம்பவ தினம் வீட்டில் மனைவி யுடன் இரு புதல்வர்களும் இருந் ததாகவும் அச்சந்தர்ப்பத்தில் கடத்தலை தடுக்க போராடிய மகன் ஒருவர் தாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
(படம் : அடையாளப்படம்)
இரத்தினபுரியில் மாணிக்கக்கல் வர்த்தகரின் மனைவி கடத்திச் செல்லப்பட்ட சம்பவம்.. 4 நாட்களாக CCTV க்கள் மூலம் தேடுதல் நடத்தியும் பலன் இல்லை. இரத்தினபுரியில் மாணிக்கக்கல் வர்த்தகரின் மனைவி கடத்திச் செல்லப்பட்ட சம்பவம்.. 4 நாட்களாக CCTV க்கள் மூலம் தேடுதல் நடத்தியும் பலன் இல்லை. Reviewed by Madawala News on 8/01/2017 09:15:00 AM Rating: 5