Kidny

Kidny

லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிக்காகோ நகரங்களை அழிக்கும் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது.


அமெரிக்காவானது கத்தி விளிம்பில் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கருத்துகளை வெளியிட்டு வரும் அந்நாட்டு ரொடொங் சின்மன் பத்திரிகையே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா எதிர்பார்க்காத பரிசுப் பொதிகளைப் பெற நேரிடும் என அந்தப் பத்திரிகையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட் டுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய ஏவுகணை நிகழ்ச்சித் திட்டம் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிக்காகோ ஆகிய அமெரிக்க நகர்களைத் தாக்கக்கூடிய வல்லமையைக் கொண்டதாக வேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக நிபு ணர்கள் எச்சரித்து சில நாட்களிலேயே வட கொரியாவின் மேற்படி அச்சுறுத்தல் வெளி யாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"அமெரிக்காவின் பிரதான நிலப் பகுதி ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வினாடியும் வாழ்வா சாவா என்ற நிலையில் கத்தி முனையில் உள்ளமையே புதிய யதார்த்தமாகும்.

இது அமெரிக்கா வக்கு ( சமாதானத்துக்கு அடையாளமாக) வெள்ளைக் கொடியை அசைக்கவும் வட கொரியா தொடர்பான தனது அடிப்படைக் கொள்கையை மாற்றவும் நிர்ப்பந்தத்தை தோற்றுவித்துள்ளது" என வட கொரிய பத்திரிகையில் வெளியாகியுள்ள அந்த செய் தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதி பதி டொனால்ட் ட்ரம்ப்பின் அரசாங்கம் தற்போது முக்கிய இடம் கொடுக்க வேண்டிய பிரச்சினையாக கொரியாவின் அணு ஆயுதக் களைவு அல்லாது அமெரிக்காவின் பிரதான நிலப் பகுதியை தாக்குதலிலிருந்து பாதுகாப்பது உள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிக்காகோ நகரங்களை அழிக்கும் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிக்காகோ நகரங்களை அழிக்கும் அணு ஆயுதம் தயாரிக்கப்படுகிறது. Reviewed by Madawala News on 8/05/2017 11:37:00 AM Rating: 5