Kidny

Kidny

காத்தான்குடி மீனவர்களின் மீன்கள் களவாடப்படுகின்றன.


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மீனவர்களின் மீன்கள் களவாடப் படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

தினமும் செட்டிப் பாளைய கடலில் வைத்தே மீன்கள் களவாடப்படுவதாக காத்தான்குடி மீனவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மற்றும் கல்முனை மீனவர்களின் மீன்களே இவ்வாறு களவாடப்படுகின்றன.

தினமும் இருபது இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான மீன்கள் களவாடப்படுவதாகவும் செட்டிப்பாளைய கடலில் வைத்து இந்த களவுச் சம்பவம் இடம் பெறுவதாகவும் மீனவர்கள் தெரிவிக் கின்றனர்.

இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக பலரிடத்தில் கூறியும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லையெனவும் மீனவர்கள் தெரிவித் தனர்.

இது விடயமாக காத்தான்குடி மீனவர் கூட்டுறவுச் சங்கம், காத் தான்குடி சாஹிறா மீனவர் சங்கம், காத்தான்குடி ஜெயிலானி ஆழ்கடல் மீனவர் சங்கம், பெரிய மீன்பிடி படகுரிமையாளர் சங்கம் என்பன இணைந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளன.

இது தொடர்பாக விரைவில் காத்தான்குடியிலுள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக் கவுள்ளதாகவும் காத்தான்குடி மீன வர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி மீனவர்களின் மீன்கள் களவாடப்படுகின்றன. காத்தான்குடி மீனவர்களின் மீன்கள் களவாடப்படுகின்றன. Reviewed by Madawala News on 8/18/2017 09:46:00 AM Rating: 5