tg travels

பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபை பதவி விலக்குவதாக இல்லை.. ஊடக செய்திக்கு பதில்.


பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரை செய்யவில்லை என்று அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறியுள்ளார்.

அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்தவொரு எண்ணமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பதவியை, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரே வகிக்க வேண்டும் என்று ஆணைக்குழு கூறியுள்ளது.

எனினும் எம்.ஆர். லத்தீப் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்பதனால் சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் தோன்றுவதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி இந்த நிலமையை கவனத்திற் கொண்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பதவியில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் இருக்கும் நிலையை ஏற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார்.

இதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆரியதாஸ குரே கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்மைய நாட்களில் வௌியாகியிருந்த ஊடகச் செய்திகள் உண்மையற்றது என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே  கூறினார்.
பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபை பதவி விலக்குவதாக இல்லை.. ஊடக செய்திக்கு பதில். பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபை  பதவி விலக்குவதாக இல்லை.. ஊடக செய்திக்கு பதில். Reviewed by Madawala News on 8/12/2017 04:35:00 PM Rating: 5