tg travels

இங்கிலாந்து M 1 அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பஸ் - 2லொறி விபத்து. பலர் பலி.


இங்கிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் Buckinghamshire பிரதேசத்தின் Newport Pagnell என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு லொரி மற்றும் மினி பஸ் ஒன்றும் மோதியதினாலேயே இந்த விபத்த நிகழ்ந்துள்ளது.

பிரித்தானிய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் இரு சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக Thames Valley பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசர பிரிவுகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாகவும், குறித்த பகுதியில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

M1 traffic
இங்கிலாந்து M 1 அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பஸ் - 2லொறி விபத்து. பலர் பலி. இங்கிலாந்து M 1 அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பஸ் - 2லொறி  விபத்து. பலர் பலி. Reviewed by Madawala News on 8/26/2017 04:33:00 PM Rating: 5