Yahya

அதிரடிப்படை தாக்குதலில் பொலிசாரிடம் சிக்கிய பாதாள உலக குழு வெளியிடும் திடுக் தகவல்கள்.


(எம்.எப்.எம்.பஸிர்)

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட் டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவன் தெமட்டகொட சமிந்தவை கொலை செய்ய வகுக்கப்பட்டுள்ள இரகசிய திட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து போதைப்பொருள் வர்த்தகம் புரியும் மாகந்துரே மதூஷ் தனது இராச்சியத்தை தக்க வைத்து கொள்ள இந்த கொலையை செய்ய திட்டமிட்டுள்ளமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.


கடந்த சனிக்கிழமை நீர்கொழும்பு குரண பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ஆயுதக் குழுவில் இருந்த கடற்படையில் இருந்து தப்பி வந்த, மாகந்துரே மதுவின் வலது கரமான வஜிரவின் கீழ் செயற்பட்ட  பாதாள உலக குழு உறுப்பினர் ரந்தீவை பொலிஸார் கைது செய்துள்ள நிலையிலேயே இந்த இரகசியம் அம்பலத்துக்கு வந்துள்ளது.


களனி விசேட புலனாய்வு பிரிவும் பேலியகொட விசேட குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையி லேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப் பட்டு மேற்படி இரகசியத் திட்டம் அம்பலத் துக்கு வந்துள்ளது.

துப்பாக்கி சூடு தொடர்பிலான வழக்குக்கு அழைத்து
செல்லப்படும்  போது சிறைச்சாலை பஸ் வண்டியை மறித்தோ அல்லது புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலோ இந்த கொலை திட்டத்தை அரங்கேற்றத் திட்டம் தீட் டப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசார வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சயனைட் விஷம் கலந்த ஊசி மூலமோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தியோ இந்த கொலையை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தயார்படுத்தல்களாக பொலிஸ் பரிசோதகர்கள் அணியும் சீருடையை ஒத்த சீருடை தொகுதியொன்றும் ரீ 56 ரக துப்பககி ஆகியவற்றையும் ரந்தீவின் கள்ளக் காதலியின் வீட்டில் மறைத்து வைத் திருந்த போது பொலிஸார் கைப்பற்றியுள் ளனர்.

 தோட்டாக்கள், மெகஸின் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகள் ஆகியவற் றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை 5.15 மணி யளவில், திட்டமிட்ட குற்றம் ஒன்றினை அரங்கேற்ற குழுவொன்று வேனொன்றில் பயணித்து கொண்டிருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

சிலாபம் பகுதியில் இருந்து நீர்கொழும்பு நோக்கி இந்த குழு பயணிப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற் றிருந்த தகவலுக்கு அமைய ஜீப் வண்டி யொன்றில் குறித்த வேனை பின் தொடர்ந்த அதிரடிப் படையினர் நீர்கொழும்பு குரண  வில்
வேனிலிருந்து அதிரடிப் படையினரை நோக்கி துப் பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் உடன் செயற்படையினர் பதில் தாக்குதலுடன் வேனை முழுமையக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.


இதன்போது வேனில் நால்வர் இருந் ததுடன் அவர்களில் இருவர் அதிரடிப் படையினரின் தாக்குதலில் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்த இருவரும் உட னடியாக சீதுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவர்கள் இருவரும் வடகொழும்பு போதனா வைத் தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதில் ஒருவர் நேற்று முன் தினம் நள்ளிரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற் றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய சேகரவின் மேற்பார்வையில்
பொலிஸ் அத்தியட்சர் அநுர சில்வாவின் நீர்கொ ழும்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரவுட்லரின் தலைமையின் கீழான குழுவினர் முன்னெடு த்துள்ள சிறப்பு விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக ஆயுதக் குழு பயணித்த வேனின் பதிவு தொடர்பில் போலியான ஆவ ணங்களும் இலக்கத் தகடுகளுமே இருந்தான.


சம்பிக்க குமார ஜயதுங்க, சீதுவையைச் சேர்ந்த 41 வயதுடைய வஜிர குமார, தெல்தெனியவை சேர்ந்த 40 வயதுடைய ஜனக அருண சாந்த, ராகமவை சேர்ந்த 31 வய துடைய தரிந்து மதுரஷ் ஆகியோரே அந்த வேனில் வந்த இருந்தவர்களாவர்.

இவர்களில் சம்பிக்க குமார ஜயதுங்க ராகம வைத்தியசாலையிலும், மாகந்துரே மதுவின் சகா வான வஜிர குமார ஆபத்தான நிலையில் தேசிய வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் குறித்த குழு பொலிஸாரிடம் சிக்கிய நிலையில், அதில் உள்ள தரிந்து மதுாஷ் என்பவரது ராகம வீட்டிலில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட இரு பொதி களை ரந்தீவ் என்பவர் எடுத்து சென்றமை தொடர்பில் களனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பண்டாரவுக்கு தகவல் கிடைக்கவே ரந்தீவை பிந்தொ டர்ந்து பொலிஸார் அவரை கைது செய்து முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தெமட்டகொட சமிந்தவின் குழு, மாகந்துரே மதுவின் போதைப் பொருள் வலையமைப்பை விடுத்து வேறு ஒரு வலையமைப்புடன் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்து வருகின் றது.

எனினும் புளூமென்டல் சங்க, அங் கொட லொக்கா, ஆமி சம்பத் குழுவினர் மதுவின் போதைப்பொருள் வலையமைப்புடன்
கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்து வாருகின்றந்து.
எனினும் போதைப்பொருள் வர்த்தக    சாம்ராஜ்ய
தலைவனாக  மாகந்துரே மதூஷ் முயற்சிக்கவே இந்த படுகொலை திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்,.

 ஏற்கனவே பஸ்மீது  தாக்குதல் நடத்தி சமயன் உள்ளிட்ட பாதாள உலக குழு உறுப்பினர்களை கொலை செய்த அனுபவம் மதுாஷ் குழுவினருக்கு உள்ள நிலையில், இந்த கைதுகள் ஊடாக பாரிய ஆபத்து தடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதிரடிப்படை தாக்குதலில் பொலிசாரிடம் சிக்கிய பாதாள உலக குழு வெளியிடும் திடுக் தகவல்கள். அதிரடிப்படை தாக்குதலில்  பொலிசாரிடம் சிக்கிய பாதாள உலக குழு வெளியிடும் திடுக் தகவல்கள். Reviewed by Madawala News on 8/17/2017 12:18:00 PM Rating: 5