Ad Space avaiable

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் நான் வாக்களிக்கப் போகும் முதலாவது தருணம் ...


அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகத்துக்கு, ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, தான் வாக்களிக்கப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  

காலியில், நேற்று முன்தினம் (05) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், நாடாளுமன்றத்தில் தனக்குள்ள வாக்குரிமையை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, முதன்முறையாக பயன்படுத்தப் போவதாக அவர் தெரிவித்தார். 


ஒன்றிணைந்த எதிரணியின் 33 அங்கத்தவர்களால் கைச்சாத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவலவுக்கு கடந்த வியாழக்கிழமை (03) சமர்ப்பிக்கப்பட்டது.  


“நான் என்னுடைய வாக்கை, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக மாத்திரமல்லாது, அரசாங்கத்துக்கு எதிராகவும் சமர்ப்பிப்பேன். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் நான் வாக்களிக்கப் போகும் முதலாவது தருணம் இதுவாகும்” என்று அவர் கூறினார்.  


எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் தனக்குள்ள வாக்குரிமையை பயன்படுத்தாமையால், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணையின் போதும், தான் வாக்களிக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் நான் வாக்களிக்கப் போகும் முதலாவது தருணம் ... இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நாடாளுமன்றத்தில் நான் வாக்களிக்கப் போகும் முதலாவது தருணம் ... Reviewed by Madawala News on 8/07/2017 09:22:00 AM Rating: 5