Kidny

Kidny

தேர்தல் மூலம் தெரிவாகும் அரசியல்வாதிகள் ,தேர்தலை ஒத்தி வைப்பதற்காக சட்டம் இயற்றுவது ஜனநாயத்துக்கு முரணானது. துரதிஷ்டமானது.


தேர்தல் மூலம் தெரிவாகும் அரசியல்வாதிகள் ,தேர்தலை ஒத்தி வைப்பதற்காக சட்டம் இயற்றுவது துரதிஷ்டமானது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் அதன் காலத்தை நீடிப்பது ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ள அவர், தேர்தலை ஒத்
திவைக்கும் உரிமை தேர்தல்  ஆணைக்குழுவுக்கு
கிடையாது எனவும் தெரி வித்துள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூ ரியில் நடைபெற்ற அரசியல் மற்றும் அரசியல் தலைமைத்துவ டிப்ளோமா பாடநெறி சான்றிதழ் வழங்கும் நிகழ் விலே அவர் இதனை தெரிவித்தார். தேர்தல் நடத்தாத நாடும் தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணைக்குழுவும் உள்ள நாடு இது என மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதியும் முன்பிருந்த ஜனாதிப திகளும் பயன்படுத்துவது மக்களின் அதிகாரத்தையேயாகும்.

 நிறைவேற்று அதி காரத்தை மக்களின் அதிகா ரமே உருவாக்குகிறது. ஆட்சி அதிகாரம் முழுமையாக வாக்குரிமையின் அடிப்படையிலே இருக்கிறது. தேர்தல் நடத்துவதற்கான சட்டங் களை பாராளுமன்றம் தான் தயாரிக்க வேண்டும்.தேர்தல் ஆணைக்குழுவி னால் தேர்தல் நடத்த முடியுமென்றால் 2013 இல் மட்டக்களப்பு தேர்தலை யும் 2013 ஆகஸ்டில் வன்னி மற்றும் யாழ். மாநகர தேர்தல்களையும் 2014 முதல் ஒத்திவைக்கப்பட்ட சகல தேர் தல்களையும் நடத்தியிருப்போம்.

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப் பட்டிருந்தால் அவற்றின் பதவிக்கா
லம் முடிவடைந்து அடுத்த தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு  அவகாசம் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதே வேளை மாகாணசபை தேர் தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று கோரி தேர்தல்கள் ஆணை யாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனா திபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியல் அமைப்பை மீறும் செயல் என்று அவர் அதில் சுட் டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு அதற்கு அமைச்சரவையும் அங்கீகா ரம் வழங்கியுள்ளது.அடுத்த மாதம் சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைகின்றன.ஆனால் இறுதி மாகாண சபையின் பதவிக் காலம் 2019 இல் நிறைவடைகிறது.

இந்த நிலையில் சகல மாகாண சபை களினதும் தேர்தல்களையும் 2019 இல் நடத்த அரசு திட்டமிட்டது.

ஆனால் கடந்த வாரம் நடத்த சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட் டத்தில் தேர்தலை ஒத்திவைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கு உரிய காலத் தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இங்கு யோசனை தெரிவிக் கப்பட்டது.ஜனாதிபதியும் இதற்கு ஆதரவு தெரிவித்ததாக தெரிய வரு கிறது.இந்த நிலையில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஜானாதி பதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கமைய மாகாண சபை தேர்தல் தொடர்பில் நாளை13) செவ்வாய்க் கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் ஆராயப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.


தேர்தல் மூலம் தெரிவாகும் அரசியல்வாதிகள் ,தேர்தலை ஒத்தி வைப்பதற்காக சட்டம் இயற்றுவது ஜனநாயத்துக்கு முரணானது. துரதிஷ்டமானது. தேர்தல் மூலம் தெரிவாகும் அரசியல்வாதிகள் ,தேர்தலை ஒத்தி வைப்பதற்காக சட்டம் இயற்றுவது ஜனநாயத்துக்கு முரணானது. துரதிஷ்டமானது. Reviewed by Madawala News on 8/14/2017 09:39:00 AM Rating: 5