Kidny

Kidny

லசித் மலிங்கவுக்கு வயதாகிவிட்டது. அவரோட வேகமும் குறைந்துவிட்டது. ஷிகர் தவான்.


லசித் மலிங்கவுக்கு இப்போது வயதாகிவிட்டது. அதனால் அவரு டைய வேகமும் குறைந்துவிட்டது என இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

 லசித் மலிங்க குறித்து கருத்து வெ ளியிட்டுள்ள வடிகர் தவான் தெரிவித்துள்ளதாவது,

லசித் மலிங்க கிரிக்கெட் உலகின் ஒரு ஜாம்பவான். அவர் சர்வதேச போட்டிகளில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் அளப்பரியவை அவரின் வேகத்திற்கு எந்த வீரராக இருந்தாலும் சற்று அஞ்சுவார்கள் .

ஆனால் தற்போது அவருடைய வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. காரணம் அவருக்கு சற்று வயதாகி விட்டது என்று நினைக் கிறேன்.

காலத்தோடு பார்க்கும் போது முன்பிருந்த வேகம் இப்போது இருக்காது. அதனால்தான் அவருடைய வேகம் குறைந்துள்ளதாக நினைக்கிறேன்.

எல்லோருக்கும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக செயற்பட்டு விட முடியாது என்றும் ஷிகர் தவான் மலிங்க குறித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.


லசித் மலிங்கவுக்கு வயதாகிவிட்டது. அவரோட வேகமும் குறைந்துவிட்டது. ஷிகர் தவான். லசித் மலிங்கவுக்கு வயதாகிவிட்டது. அவரோட வேகமும் குறைந்துவிட்டது. ஷிகர் தவான். Reviewed by Madawala News on 8/24/2017 02:19:00 PM Rating: 5