Kidny

Kidny

எதிரணியில் சிலருக்கு விற்பனை செய்தல் மற்றும் குத்தகைக்கு விடல் ஆகியவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் விளங்குவதில்லை.


அரசின் முடிவுகளை விமர்சிக்கும் சிலருக்கு விற்பனை செய்தல் மற்றும் குத்தகைக்கு  விடுதல் ஆகியவைகளுக்கு இடையிலுள்ள வித்தியாசம் யாது என்பது விளங்குவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள்.  

கொலொன்னாவை பாராளுமன்ற ஆசனத்தில் கிராமப் பாதைகளை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைதிட்டத்தின் கீழ் ரூ.155 இலட்சம் செலவில் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட வெல்லம்பிட்டடியா கப்பித்தாவத்தை பாதை, மாளிகாகொடெல்ல குளப் பாதை, மல்கம விiயாட்டுத் திடலைச் சுற்றி வரும் பாதை மற்றும் கொத்தட்டுவை மொரவிட்டிய  ஆகிய பாதைகளை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அங்கு மேலும் கூறுகையில், ரூபாய் 19000 கோடிக்கு மேல் கடன் பெற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்தார்கள். எனினும் 2015ம் ஆண்டு 15 கப்பல்களே இத்துறைமுகத்திற்கு வந்தன. 2016ம் ஆண்டிலும் அதேயளவு கப்பல்களே வருகை தந்தன. இந்த வருடத்தின் 06 மாதங்களில் 10 கப்பல்களே வந்துள்ளன. இத்துறைமுகத்தை நிறுவுவதற்காக பெற்றுக்கொண்ட கடன் தவணைப் பணத்தை செலுத்துவதற்கு மேலதிகமாக ஒவ்வொரு நாளும் இதைப் பராமரிப்பதற்காக பாரிய அளவிலான நிறைவேற்றுச் செலவினமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.


அரசு பதியேற்று இரண்டைறை ஆண்டுகளுக்குள் அரசு எடுத்த வெற்றிகரமான தீர்மானமே ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மர்ச்சண்ட் நிறுவனத்திற்கு குத்தகை;கு விடுவதற்காக  கையொப்பமிட்ட குத்தகை ஒப்பந்தம். விற்பனை செய்வதற்கும் குத்தகைக்கு விடுவதற்கும் உள்ள வித்தியாசம் சிலருக்கு விளங்குவதில்லை. அதை நாங்கள் விளக்கினாலும் பிரயோசனமில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், வேலையற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் ஆகியவைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள இன்னும் இரண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


அதில் ஒன்று ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயம் ஆரம்பிக்கப்பட்டு பாரிய கைத்தொழில் பேட்டை அமைக்கப்பட்டு அதில் இளைஞர்கள் யுவதிகள் ஆகியோர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும். தை;தொழில் மேம்பாட்டினால் உற்பத்தி பொருளாதாரம் செயற்பட வாய்ப்ப்பு கிடைக்கின்றது. அதேபோன்று,  இக்கைத்தொழில் பேட்டையில் தயாரிக்கப்படும் முதலீட்டாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பபை ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியம். அவ்வாறின்றேல் முதலீட்டாளரகள் வரமாட்டார்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஏனைய நாடுகளுடன் சுதந்திர வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இனிவரும் மிகுதியாயுள்ள மூன்று வருடங்களில் தொழில் வாய்ப்பின்மைக்கு தீர்வை வழங்கி, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதால் மாத்திரம் தான் மக்களுடைய நல்லபிப்பிராயத்தை பெற்றுக் கொள்ள முடியும்.


அதற்கான முதலாவது தீர்மானத்தை எடுத்துள்ளோம். இரண்டாவது மற்றும் அதன்பின்னர் எடுக்கக் கூடிய தீர்மானங்களை அரசு நேரடியாக மேற்கொண்டு நாட்டிற்கும் மக்களுக்கும் அனுகூலமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் கூறினார்.

புகைப்படம் 01 - எஸ்.எம்.மரிக்கார் அவர்களினால் வெல்லம்பிட்டியா கப்பித்தாவத்தை பாதை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு இப்படத்தில் காணப்படுகிறது. இதில் கொலொன்னரவை நகர சபையின் முன்னைய எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். குத்தில அவர்களும் பிரதேச மக்களும் காணப்படுகின்றனர்.

புகைப்படம் 02 - எஸ்.எம்.மரிக்கார் அவர்களினால் வல்கம விளையாட்டுத் திடலைச் சுற்றியுள்ள பாதையின் பெயர்ப் பலகையை திறந்து வைக்கும் நிகழ்வு இப்புகைப்படத்தில் காணப்படுகிறது.  இதில் கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபையின் முன்னைய எதிர்க்கட்சித் தலைவர் இந்திக குருப்பு ஆரச்சி அவர்களும் பிரதேச மக்களும் காணப்படுகின்றனர்.

எதிரணியில் சிலருக்கு விற்பனை செய்தல் மற்றும் குத்தகைக்கு விடல் ஆகியவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் விளங்குவதில்லை. எதிரணியில் சிலருக்கு விற்பனை செய்தல் மற்றும் குத்தகைக்கு விடல் ஆகியவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் விளங்குவதில்லை. Reviewed by Madawala News on 8/01/2017 02:57:00 PM Rating: 5