Kidny

Kidny

அதிகரித்த மூட்டைப்பூச்சி தொல்லை.. மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் வேலை நிறுத்தம்.

 
மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களின் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று காலை 10 மணி முதல் அவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் கூறியுள்ளது. 

புகையிரத கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தங்குமிடங்களில் அதிகரித்துள்ள மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாததால் கடும் தொல்லைக்கு ஆளாகி வருவதாக குற்றம் தெரிவிக்கப்பட்டே இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகரித்த மூட்டைப்பூச்சி தொல்லை.. மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் வேலை நிறுத்தம். அதிகரித்த மூட்டைப்பூச்சி தொல்லை.. மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில் வேலை நிறுத்தம். Reviewed by Madawala News on 8/12/2017 11:13:00 AM Rating: 5