tg travels

மடவளையில் நடந்து முடிந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (sltj) மடவளைக் கிளை ஏற்பாடு செய்திருந்த "மார்க்க விளக்க பொதுக்கூட்டம்" நேற்று 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் 6:15 வரை பாடசாலை வீதி, சுல்பிநானா வீட்டு முற்றவெளியில் சுமூகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

•தலைப்பு 1 :- உல்கிய்யாவின் சட்டங்கள்
உரை:- மௌலவி ஷில்மி ரசீதி (sltj துணைச்செயலாளர்களில் ஒருவர்)
•தலைப்பு 2 :- நாங்கள் சொல்வதென்ன?
உரை:- சகோ. ஹிஷாம் M.I.Sc (sltj பொதுச்செயலாளர்)

"நாங்கள் சொல்வதென்ன" என்ற தலைப்பில்,

எமது தஃவா பிரச்சாரத்தின் மூலம் அல் குர்ஆன் அல் ஹதீஸையும் இவற்றுக்கு முரணான வழிகெட்ட ஊர் வழமை, முன்னோர்கள், பெரியோர்கள், பலவகையான இயக்க சிந்தனைகள், மத்ஹபுகள் என்பவற்றையும் கலந்து/சேர்த்து பின்பற்றாமல் "வஹீ"யை மாத்திரம் (அல்குர்ஆன்+அதற்கு முரணாகாத அல் ஹதீஸ்) பின்பற்றுவதே மறுமையில்
வெற்றியைத்தரும் என்பதனை நாம் கூறிவருவதை வஹியின் ஆதாரங்களுடன் அழகிய முறையில் ஆணித்தரமாக செய்திகள் முன்வைக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் (sltj)
மடவளைக் கிளை.
மடவளையில் நடந்து முடிந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம். மடவளையில் நடந்து முடிந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம். Reviewed by Madawala News on 8/28/2017 11:59:00 AM Rating: 5