tg travels

இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் .


இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித்  மியான்டாட் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் சம்மேளனம்   சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடுவதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டுமென அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜாவிட் மியான்டாட் தெரி வித்துள்ளார்.


தங்கள் தேசத்தின் நலனையும் கெளரவத்தையும் காக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த முடிவை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுமென மியான்டாட் கூறி புள்ளார்.

அவ்வாறு செய்தால்தான், தங்கள் அணிக்கு சர்வதேச அரங்கில் உரிய மரியாதை கிடைக்கும் என்றும் மியான் டாட் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் . இந்திய கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் . Reviewed by Madawala News on 8/08/2017 02:29:00 PM Rating: 5