Kidny

Kidny

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட முக்கிய புலித் தலைவரின் துப்பாக்கிக்கு இரண்டரை இலட்ச ரூபா.. (சிக்கிய இராணுவ அதிகாரியும் பின்னனி சம்பவமும்)


(எம்.எப்.எம்.பஸிர்) 

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் அதன் தலைவர்களில் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம். 9 மில்லி மீற்றர் கைத் துப்பாக்கியை விற்பனை செய்ய முயன்ற
இராணுவ அதிகாரி ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தின் விசேட படைப் பிரிவின் (எஸ்.எப்.) ஸ்டாப் சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவரே பேலியகொடை குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, மத்துமகல பகுதியில் வைத்து துப்பாக்கியையும் 6 தோட்டாக்களையும் இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் போர்வையில் பாதாள உலக குழுவொன்று என தம்மைக் காட்டிக் கொண்டு சென்ற பொலிஸாரே
அந்த இராணுவ வீரரைக் கைது செய்ததாக பிரதேசத்துக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த ஸ்டாப் சார்ஜன்ட்டுக்கு மேலதிகமாக அவருடன் இருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரையும் இதன்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரின் அருகிலிருந்து இந்த கைத்துப்பாக்கியையும் 6 தோட்டாக்க ளையும் குறித்த அதிகாரி மீட்டுள்ள துடன், அதனை உயர் அதிகாரியிடம் கையளிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சூது காரணமாக பெரும் தொகை பணத்தை இழந்து கடனாளியான
குறித்த இராணுவ அதிகாரி கடனை அடைக்க துப்பாக்கியை விற்பனை செய்ய தீர்மனித்துள்ளார்.

அதன்படியே தான் பாதுகாத்து வந்த புலித் தலைவர் களில் ஒருவரது துப்பாக்கியை விற்பனை செய்ய தீர்மானித்து அதற்கு இரண்டரை இலட்சம் ரூபா விலை நிர்ணயித்து பலரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் பொலிஸ் விசே படையணியின் களனி பிரிவுக்கு அது தொடர்பில் தகவல் கிடைக்கவே, பேலிய கொட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப் பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திரவின் ஆலோசனைக்கு அமைய பாதாள உலகக் குழு உறுப்பினர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு பொலிஸார் அந்த துப்பாக்கியை கொள்வனவு செய்வதைப் போன்று சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட முக்கிய புலித் தலைவரின் துப்பாக்கிக்கு இரண்டரை இலட்ச ரூபா.. (சிக்கிய இராணுவ அதிகாரியும் பின்னனி சம்பவமும்) இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட முக்கிய புலித் தலைவரின் துப்பாக்கிக்கு இரண்டரை இலட்ச ரூபா.. (சிக்கிய இராணுவ அதிகாரியும் பின்னனி சம்பவமும்) Reviewed by Madawala News on 8/15/2017 03:11:00 PM Rating: 5