Kidny

Kidny

பாதசாரியின் மீது மோதி, லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள். 27 வயது இளைஞன் உயிரிழப்பு.


பாணந்துறை, வலான பிரதேசத்தில் இருந்து கெசல்வத்தை பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 27 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரியின் மீது மோதி, லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மொறட்டுவை கட்டுக்குருந்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் லொறி சாரதியை கைது செய்துள்ளனர்.
பாதசாரியின் மீது மோதி, லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள். 27 வயது இளைஞன் உயிரிழப்பு. பாதசாரியின் மீது மோதி, லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள். 27 வயது இளைஞன் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 8/27/2017 02:00:00 PM Rating: 5