tg travels

சுமார் 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக்கி மலிவு விலையில் விற்ற இருவர் சிக்கினர்.


நாட்டின் பல பகுதிகளிலிருந்து மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக்கி விற்பனை செய்த ஒருவரை தொம்பே பொலிஸார் கைது செய்
துள்ளனர்.

 இவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முன்னாள் இராணுவ கொமான்டோ படை வீரர் ஒருவரையும் தொம்பே பொலிஸார்  தொம்பே தேகவத்த பிர தேசத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த முன்னாள் இராணுவ வீரரால் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை மிகவும் மலிவான விலைக்கு கொள்வனவு செய்து அவைகளை உதிரிப் பாகங்களாக விற்பனை செய்து வந்த நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் இராணுவ வீரரால் திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்கள் உட்பட பாகங்கள் அகற்றப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களின் செஸிகளும் 4 என்ஜின்களும் உள்ளடங்கலாக பெருந்தொகையான மோட்டார் சைக்கிள் பாகங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களினதும் பாகங்
களினதும் பெறுமதி ஐம்பது இலட் சம் ரூபாவுக்கும் மேல் என கூறப்படு கின்றது.

தொம்பே தேகவத்த பிரதேசத்தில் வைத்து இரு தச்சன்களின் மோட்டார் சைக்கிள் இரண்டை திருடி தப்பிச் செல்லும் போது பிரதேச மக்களின் உதவியுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

 தொம்பே பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப் பதிகாரி துசித ஜயகொடியின் கையடக்கத் தொலைபேசிக்கு கிடைத்த தகவலையடுத்து இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டதை
யடுத்தே இவ் வியாபாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகிய இம் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து இரண்டு கிராம் ஹெரோயினும் கண்டெடுக் கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 6 மோட்டார் சைக் கிள்களில் நான்கு தொம்பே பொலிஸ் பிரதேசத்திலிருந்தும் மீதி இரண் டும் நவகமுவ மற்றும் ஹங்வல்ல பொலிஸ் பிரதேசத்திலிருந்தும் திரு டப்பட்டுள்ளன.

இலட்சக்கணக்கான ரூபா பெறும திமிக்க இம்மோட்டார் சைக்கிள்கள் ரூபா.10,000 ரூபாமுதல் 20,000 ரூபா வரை மிகவும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டுள்ளன.

இம்மோட்டார் சைக்கிள்களை பாகங்களாக பிரித்து சஸி மற்றும் என்ஜின் இலக்கங்கள் கிரைன் டர் மூலம் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகற்றப்பட்ட பாகங்கள் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


முன்னாள் இராணுவ வீரர் கடந்த 2015 ம் ஆண்டு ஊவா குடா ஒய இராணுவ முகாமில் பயிற்சி பெறும் போதுதப்பிச்சென்றவர் என தெரியவருகிறது.
இவர் பஹல தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத நபர் 24)என்றும் மோட்டார் சைக்கிள் களை கொள்வனவு செய்த நபர்(35) பஹல மாபிடிகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரி வித்தனர்.


இரு நபர்களும் பூகொடை மஜிஸ் திரேற் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் படவுள்ளனர்.

தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள.

சுமார் 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக்கி மலிவு விலையில் விற்ற இருவர் சிக்கினர். சுமார் 50 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக்கி மலிவு விலையில் விற்ற இருவர் சிக்கினர். Reviewed by Madawala News on 8/28/2017 10:42:00 AM Rating: 5