tg travels

ஐயூப் அஸ்மின் மூதூர் மக்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதையும் மறுப்பாரா !

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


பாசிச இரத்த வெறி பிடித்த புலிப்பயங்கர வாதிகளால்
மூதூர் மக்கள் வெளியேற்றம் (2006.08.04) இன்றுடன் 11 வருடங்கள்
பூர்த்தியாகின்றது


இந்த துன்பவியல் நிகழ்வுக்கும் புலிப்பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இல்லையென வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கருத்து கூறினாலும் ஆச்சரியம் இல்லை

மூதூர் இனசுத்திகரிப்பின் போது முஸ்லிம்கள் பின்வரும்  இழப்புக்களை சந்தித்தனர்

மூதூர் முஸ்லிம்கள் 2006.08.04 ம் திகதி வெள்ளிக் கிழமை சொந்த மண்ணை விட்டும் வெளியேற்றப்பட்ட நாள்.

#53 முஸ்லிம்கள் மரணமடைந்த நாள்.

#ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்ட நாள்.

#பல மில்லியன் ரூபாய் சொத்துக்களை இழந்த நாள்.

#தண்ணீர் அருந்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நாள்.

#மஃசர் மைதானம் போல் மக்கள் அனைவரதும் மரண ஓலம் கேட்ட நாள்.

#கினாந்தி முனையில் வைத்து #பிரசவம் பார்க்கப்பட்ட நாள்.

அன்று பிறந்த குழந்தை 2016 ல் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

#வெள்ளிக் கிழமை பெரும்பாலான பள்ளிவாயல்களில் ஜும்ஆ நடைபெறாத நாள்.

#இலங்கை முழுவதும் வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ பேருரையில் மூதூர் மக்களுக்காக இறைவனிடம் துஆ பிரார்த்தனை செய்யப்பட்ட நாள்.

#மூதூரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை வெளியூர் மக்கள் தண்ணீர்,பானங்கள்,உணவுகள் தந்து வரவேற்ற நாள்.

#கிண்ணியா,கந்தளாய் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் உணர்வுகளையெல்லாம் மறந்து தஞ்சமடைந்த நாள்.

#கினாந்திமுனை என்ற பெயர் பிரபலயம் பெற்ற நாள்.

#கினாந்திமுனைக் காவியத்தை எழுத வைத்த நாள்.
ஐயூப் அஸ்மின் மூதூர் மக்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதையும் மறுப்பாரா ! ஐயூப் அஸ்மின் மூதூர் மக்கள் விடுதலைப்புலிகளால்  இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதையும்   மறுப்பாரா ! Reviewed by Madawala News on 8/04/2017 06:53:00 AM Rating: 5