Kidny

Kidny

ஆற்றில் வீழ்ந்த கார்... தந்தை , மகன் உயிரிழப்பு. #கடுகன்னாவை பிரதேச நபர்களுக்கு சோக சம்பவம்.

கேகாலையில் கார் ஒன்று ஓயா ஒன்றில் வீழ்ந்து, தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளதுடன், தாய், மகள் மற்றும் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கேகாலை - பிடகல்தெனிய - குருகொடை ஓயாவில் சிற்றூந்து வீழ்ந்து, தந்தை மற்றும் அவரது மகன் உயிரிழந்துள்ளதுடன் , 3 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 3 பேரும் தாய், மகள் மற்றும் விபத்தில் உயிரிழந்த மகனின் மனைவி என அறியவந்தள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், 57 வயதுடைய தந்தை மற்றும் 20 வயதுடைய மகனும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடுகன்னாவை பிரதேசத்தினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கோர விபத்தில் சிக்கியுள்ளனர்.

குறித்த காரை  தந்தை செலுத்தியுள்ளமை அறியவந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் கொட்டாவை பிரதேசத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
ஆற்றில் வீழ்ந்த கார்... தந்தை , மகன் உயிரிழப்பு. #கடுகன்னாவை பிரதேச நபர்களுக்கு சோக சம்பவம். ஆற்றில் வீழ்ந்த கார்... தந்தை , மகன் உயிரிழப்பு. #கடுகன்னாவை பிரதேச நபர்களுக்கு சோக சம்பவம். Reviewed by Madawala News on 8/17/2017 09:39:00 AM Rating: 5