Kidny

Kidny

முழு குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்கும் வரை ஓயமாட்டோம் !


(எம்.எப்.எம்.பஸிர்)
அரசாங்கம் தனது இயலாமை, மோசடி ராஜபக்ஷ குடும்பத்தினரை பழி வாங்குகிறது.

 வசிம் தாஜுதீன் கொலை சதி தொடர்பிலான பழி முதலில் எனது தம்பியின் காதலியுடன் ஆரம்பித்தது. பின்னர் அது எனது தம்பி, என்மீது சுமத்தப்பட்டு தற்போது அதனுடன் எனது அம்மா தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.

தாஜுதீனை கொல்ல எனது அம்மா தான் சதித்திட்டம் தீட்டினாராம். வீட்டில் உள்ள பெண்ணை பழிதீர்க்கும் அளவுக்கு இந்த அரசாங்கம் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றது.

எமது முழு குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் இந்த கீழ்த்தர மான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை நாம் ஒயப் போவதில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித் தார்.

குற்றப்புலனாய்வுப் பிரிவு நாமல் எம். பி.யின் தாயான ஷிரந்தியையும், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு இளைய சகோ தரரான ரோஹித்த ராஜபக்ஷவையும் விசா ரணை செய்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இத னைத் தெரிவித்தார்.

இதன்போது நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவித்ததாவது,

இந்த அரசாங்கம் தனது இயலாமை, மோசடிகளை மறைத்துக் கொள்ள ராஜ பக்ஷ குடும்பத்தினரை பழி வாங்குகிறது. வஸிம் தாஜுதீன் கொலை சதி தொடர் பிலான பழி முதலில் எனது தம்பியின் காதலியுடன் ஆரம்பித்தது. பின்னர் அது எனது தம்பி, என்மீது சுமத்தப்பட்டு தற் போது அதனுடன் எனது அம்மா தொடர்பு படுத்தப்பட்டுள்ளார்.

தாஜுதீனை கொல்ல எனது அம்மா தான் சதித் திட்டம் தீட்டி னாராம். வீட்டில் உள்ள பெண்ணை பழி தீர்க்கும் அளவுக்கு இந்த அரசாங்கம் மிகக் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றது. எமது முழு குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் இந்த கீழ்த்தரமான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை நாம் ஒயப் போவதில்லை எதுவும் அறியாத எனது தம்பியையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

வெடித்து கீழே விழுந்த ஹரீன் பெர்னாண்டோவின் பலூன் தொடர்பில் தேடிப் பார்க்க இங்கு யாரும் இல்லை. எனினும் எனது சகோதரர் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிறுத்தி பழிவாங்கும் வானில் உள்ள ரொக்கட் தொடர்பில் விசா ரிக்கின்றனர்.

ராஜபக்ஷ குடும்பத்தின் பணம் டுபாய் வங்கிகளில் உள்ளதாக கூறினர்.

18 பில் லியன் டொலருடன் ஆரம்பித்த அந்த குற்றச்சாட்டு தற்போது 118 பில்லியன் டொலர் வரை நீண்டுள்ளது.

இன்றுவரை 50 சதத்தையேனும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இவை எம்மை பழிவாங்க கூறப்படும் போலியான குற் றச்சாட்டுக்கள்.

ராஜபக்ஷக்களை விசாரணை செய்வதன் இந்த பிணைமுறி மோசடிகளையும் இந்த அரசின் இயலா மையையும் மக்கள்  மறந்துவிடுவர் என எண்ணி விட வேண்டாம். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை நாம் போராடு வோம் என தெரிவித்தார்.
முழு குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்கும் வரை ஓயமாட்டோம் ! முழு குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்கும் வரை ஓயமாட்டோம் ! Reviewed by Madawala News on 8/16/2017 11:51:00 AM Rating: 5