tg travels

நீதிமன்ற வளவுகளில் குவிந்துள்ள வாகனங்களை விற்க யோசனை !


நீதிமன்ற வளவுகளில் குவிந்துள்ள வாகனங்களை இருமாதங்களில் உரிமையாளருக்கு வழங்க வேண்டும்.

இன்றேல் வாகனங்களை விற்று சம்பந்தப்பட்ட வழக்கின் கணக்கில் வைப்பு செய்யவேண் டும். இவ்விடயமாக ஆவன செய்வதற்கு புத்தசாசன நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தீர் மானித்துள்ளார்.

நீதிமன்ற வளவுகளில் பல வரு டங்களாக வாகனங்கள் தேங்கி உள்ளன. இவை சிதைந்து, அழி வடைந்தும் காணப்படுகின்றன.

இதனால் நோய் பரவுவதல், சுற்றாடல் பாதிப்புக்களும் ஏற் படுவதாகக் கட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்குள் சம்பந்தப் பட்ட வாகனங்களை உரிமையாளர்க ளுக்கு வழங்கவேண்டும். இன்றேல் அவற்றை விற்கவேண்டும்.

இந்த வாகனங்களை வீடியோவில் பதிவதுடன், புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளலாம்.

இவற்றை வழக்குகளின் தடயப் பொருட்களாகவும் சமர்ப்பிக்க முடியும். வாகனங் கள் பல வருடங்கள் நிறுத்தப்பட்டு சிதைந்து போவதால் வாகனத்தின் பெறுமதிகள் குறைகிறது. இந்த விடயமாக சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் வகுக்குமாறும் அமைச்சர் உத்தரவு இட்டுள்ளார்.

நீதிமன்ற வளவுகளில் குவிந்துள்ள வாகனங்களை விற்க யோசனை ! நீதிமன்ற வளவுகளில் குவிந்துள்ள வாகனங்களை விற்க யோசனை ! Reviewed by Madawala News on 8/11/2017 02:45:00 PM Rating: 5