tg travels

அஸ்மினின் புலி சார்பு கருத்தை நாம் NFGG யின் கருத்தாகவே பார்க்கிறோம்..


அய்யூப் அஸ்மினின் புலி சார்பு க‌ருத்து என்ப‌து வெறும‌னே அஸ்மினின் க‌ருத்தாக‌ நாம் பார்க்க‌வில்லை. மாறாக‌ அவ‌ரின் அக்க‌ருத்துக்கு அவ‌ரை இட்டுச்சென்ற‌வ‌ர்க‌ள் என் எஃப் ஜி ஜியின‌ரே என்ப‌தே உல‌மா க‌ட்சியின் நிலைப்பாடாகும்.


ந‌ல்லாட்சிக்கான‌ தேசிய‌ முன்ன‌ணியின‌ர் த‌ம‌து க‌ட்சிக்கான‌ ப‌த‌விக‌ளுக்காக‌ எந்த‌ சாத்தானுட‌னும் இணைவ‌ர் என்ப‌தை இவ‌ர்க‌ள் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்க‌ கோரும் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ருட‌ன் பேச்சுவார்த்தை செய்த‌ போதே உல‌மா க‌ட்சி ப‌கிர‌ங்க‌மாக‌ சுட்டிக்காட்டியிருந்த‌து. த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து செய‌ற்ப‌ட‌ உல‌மா க‌ட்சிக்கும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பாக‌ அழைப்பு வ‌ந்த‌து. ஆனால் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் பிரிந்திருக்க‌ வேண்டும் என்ப‌தில் க‌ருத்தொற்றுமை ஏற்ப‌ட்டாலேயே உல‌மா க‌ட்சி இணைவ‌த‌ற்கு முன் வ‌ரும் என‌ உறுதியாக‌ கூறிவிட்டோம். நாம் அர‌சிய‌ல் ரீதியிலும், அதிகார‌ ரீதியிலும் மிக‌ச்சிறிய‌ க‌ட்சியாக‌ இருந்த‌ போதும் ப‌த‌வியை ஆசைப்ப‌ட்டிருந்தால் எம்மாலும் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து த‌மிழ் கூட்ட‌மைப்பின் ம‌த்த‌ள‌த்துக்கு ஆடியிருக்க‌ முடியும்.

ந. தே. முன்ன‌ணியின‌ர் ஆர‌ம்ப‌கால‌த்தில் வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு ஆத‌ர‌வான‌ நிலைப்பாட்டையே கொண்டிருந்த‌ன‌ர். இத‌னை மைய‌ப்ப‌டுத்தியே த‌. கூட்ட‌மைப்பும் அவ‌ர்க‌ளுக்கு ப‌த‌வி ம‌ற்றும் ச‌லுகைக‌ள் வ‌ழ‌ங்கியிருந்த‌து. இந்த‌ நிலைப்பாட்டை உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே ப‌கிர‌ங்க‌மாக‌ தொட‌ர்ந்தேற்சியாக‌ க‌ண்டித்த‌த‌ன் கார‌ண‌மாக‌, தாம் வ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு ஆத‌ர‌வில்லை என‌ அறிக்கை விட்ட‌ன‌ர். ஆனாலும் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைய‌வே வேண்டும் என‌ தொட‌ராக‌ கூறிக்கொண்டிருக்கும் த‌மிழ் கூட்ட‌மைப்பை விட்டு இவ‌ர்க‌ள் வெளிவ‌ராமை இவ‌ர்க‌ள் முஸ்லிம் ச‌மூக‌த்தை ஏமாற்றுகிறார்க‌ள் என்ப‌து தெளிவான‌து.

இத்த‌கைய‌ இவ‌ர்க‌ளின் த‌மிழ் கூட்ட‌மைப்பின் ந‌ல‌ன் சார்ந்த‌ நிலைப்பாடுக‌ளை அவ‌ர்க‌ளோடு இருந்து க‌ற்றுக்கொண்ட‌ அஸ்மின் த‌ற்போது அவ‌ரும் புலி சார்பு க‌ருத்தை கூறி முஸ்லிம் ச‌மூக‌த்தை காட்டிக்கொடுத்து த‌மிழ் கூட்ட‌மைப்புக்கு த‌ன் விசுவாச‌த்தை காட்டியுள்ளார். இப்ப‌டி ஏற்ப‌டும் என்ப‌து ஏற்க‌ன‌வே தெரிந்த‌ விட‌ய‌ம்தான்.

ஆக‌வே ந. தே. முன‌ணியின‌ர் தொட‌ர்ந்தும் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ருட‌ன் இணைந்திருப்ப‌த‌ன் மேலும் முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை வ‌ழி த‌வ‌றிச்செல்வ‌தை த‌டுக்கும் எண்ண‌ம் இருந்தால் உட‌ன‌டியாக‌ இவ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்புட‌னான‌ ஒப்ப‌ந்த‌த்தை ர‌த்துச்செய்ய‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோருகிற‌து.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி

த‌லைவ‌ர்,முஸ்லிம் உல‌மா க‌ட்சி.

அஸ்மினின் புலி சார்பு கருத்தை நாம் NFGG யின் கருத்தாகவே பார்க்கிறோம்.. அஸ்மினின் புலி சார்பு கருத்தை நாம் NFGG யின் கருத்தாகவே பார்க்கிறோம்.. Reviewed by Madawala News on 8/04/2017 03:32:00 PM Rating: 5