Kidny

Kidny

கூட்டு தலைமைத்துவமே NFGG யின் மந்திரம்!



நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) எவ்வாறு வேறுபடுகிறது?
இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அவ்வந்தக் கட்சித் தலைவர்களது, சொந்த உடமை போன்றுதுhன் இருக்கின்றன. தலைவர் அஷ்ரஃபுக்குப் பின்னர் இதுவரையிலும் ரவூப் ஹகீம்தான் மு.காவின் தலைவர். ரிஷாத் பதியுதீனும் அப்படித்தான். மறுபுறம், ஐ.தே.கவின் தலைவர் எப்போதுமே ரணில்தான். மஹிந்த ஆட்சி செய்த காலத்தில், அவர்தான் சு.க. தலைவர், சோமவன்சவும் தசாப்தங்களாக ஜே.வி.பியின் தலைவராக இருந்தார்.


இங்குதான் NFGG வேறுபடுகின்றது. NFGG யின் தலைமைத்துவம், ஓர் கூட்டுத் தலைமைத்துவமாகும். தலைமைத்துவ சபை என்று இது வழங்கப்படுகின்றது. கட்சியின் அனைத்து விவகாரங்களும், தலைமைத்துவ சபையின் அங்கீகாரத்துடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு விடயத்தை முன்வைத்து, விவகாதித்து, அதன் அனுகூலம், பிரதிகூலங்களை முன்வைத்து, இறுதியில் ஒரு முடிவு எட்டப்படும்.

இரகசிய வாக்கெடுப்பும் நடைபெறும். எனவே, இங்கு எந்தவொரு தனிநபருக்கும் ஏகபோக உரிமையோ, செல்வாக்கோ கிடையாது.
இந்த தலைமைத்துவ சபையின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்காகவே, தலைமைத்துவ சபைக்கு ஒரு தலைவரும், செயலாளரும் தெரிவுசெய்யப்படுகின்றனர்.


இவர்கள் சாதாரண நிர்வாக வேலைகளுக்கானவர்கள் மட்டுமே, கட்சியின் அறிவித்தல்களை மக்களுக்கு வழங்குதல், கட்சிக் கூட்டங்களை கூட்டுதல் போன்ற அடிப்படை நிர்வாக வேலைகளே இவர்களது பொறுப்புக்கள். இந்தப் பதவிகளும்கூட நிரந்தரமானதல்ல. தவணை முடிந்ததும் பதவியும் இல்லாமல் போய்விடும்.


அரசியல் கட்சிகளை தமது வீட்டுச் சொத்து போன்று பயன்படுத்தி, சுகபோகங்களை அனுபவித்துச் செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கின்ற இலங்கை சூழலில், தலைமைத்துவம் குறித்த இந்த முன்மாதிரியை NFGG வழங்குகின்றது.

NFGG உடன் கைகோர்ப்போம். புதிய அரசியல் கலாசாரத்துக்கு உயிர் கொடுப்போம்!

அஷ்கர் தஸ்லீம்
கூட்டு தலைமைத்துவமே NFGG யின் மந்திரம்! கூட்டு தலைமைத்துவமே NFGG யின் மந்திரம்! Reviewed by Madawala News on 8/22/2017 02:56:00 PM Rating: 5