Kidny

Kidny

பாராளுமன்ற ஆலோசனைக்குழு சிரேஷ்ட உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் நிலாம்தீன் நளீமி வபாத்தானார்.


மிஹிந்தலை கனந்தர கட்டுக்கெலியாவையைச் சேர்ந்த பாராளுமன்ற ஆலோசனைக்குழுவின் சிரேஷ்ட உத்தியோகத்தர், ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பழைய மாணவர் அஷ்ஷெய்க்  நிலாம்தீன் நளீமி (ஜலீல்)
(46 வயது) 22/08/2017 செவ்வாய்க்கிழமை, கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மரணமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

சுமார் 21 வருடங்கள் பாரளுமன்றத்தில் இவர் பல்வேறு பதவிகளை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 அன்னாரது ஜனாசா  இன்று கனந்தர கட்டுக்கெலியாவ மையவாடியில் அஸர் தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

மாரடைப்பு காரணமாக கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

எல்லாம் வல்ல இறைவன் அவரை பொருந்திக்கொள்வானாக.

-நாச்சியாதீவு பர்வீன் - முபீன் 
பாராளுமன்ற ஆலோசனைக்குழு சிரேஷ்ட உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் நிலாம்தீன் நளீமி வபாத்தானார். பாராளுமன்ற ஆலோசனைக்குழு சிரேஷ்ட உத்தியோகத்தர் அஷ்ஷெய்க்  நிலாம்தீன் நளீமி வபாத்தானார். Reviewed by Madawala News on 8/23/2017 11:05:00 AM Rating: 5