Kidny

Kidny

இலங்கையில் உள்ள 30 சிறைச்சாலைகளில் 18,500 கைதிகள். பலர் அசெளகர்யம்.


சிறைச்சாலைகளில் இடப்பற்றாக் குறை காரணமாக கைதிகள் அசெளகர்யங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நகர்ப்புறங்களிலுள்ள சிறைச்சாலைகளிலேயே இடப்பற்றாக்குறை காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாட்டிலுள்ள 30 சிறைச்சாலைகளில் 18,500 கைதிகள் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். 

1174 கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 3500 கைதிகள் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர்.

680 கைதிகளை தடுத்து வைக் கக்கூடிய வசிதிகளை கொண்ட பொரளை மெகசின் சிறைச்சா லையில் தற்போது 1200 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை யில் 1000 கைதிகள் தடுத்து வைக் கப்பட்டுள்ளதுடன், இந்த சிறைச் சாலையில் 380 கைதிகள் தடுத்து வைப்பதற்கான இடவசதியே உள்ளது.

இதேவேளைநீர்கொழும்பு சிறைச் சாலையில் 680 கைதிகள் மாத்திரமே தடுத்து வைக்ககூடிய வசதிகள் உள்ள நிலையில், தற்போது 1100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள 30 சிறைச்சாலைகளில் 18,500 கைதிகள். பலர் அசெளகர்யம். இலங்கையில் உள்ள  30 சிறைச்சாலைகளில் 18,500 கைதிகள். பலர் அசெளகர்யம். Reviewed by Madawala News on 8/28/2017 11:34:00 AM Rating: 5