Kidny

Kidny

இறுக்கம் தளர்கிறது...கட்டார் விமான சேவைக்கு UAE மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் பாதைகளை திறந்துவிட்டன.


(எம்.ஐ.அப்துல் நஸார்)

 கட்டார் மீது இரண்டு மாதங் களாக விதிக்கப்பட்டிருந்த தடையில் தற்போது தளர்வு நிலை தோன்றியுள்ளது. கட்டாரில் பதிவு செய்யப்பட்டுள்ள விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச கடல் எல்லைக்கு மேலாகப் பறப்பதற்கு அந்நாடுகள் அனு மதி வழங்கியுள்ளன.

கட்டார் இதனை தனது நாட்டுக்குக் கிடைத்த மிகப் பெரும் வெற்றி என வர்ணித்துள்ளது.

கட்டார் விமான சேவை தற்போது ஐக்கிய அரபு அமீ ரகம், பஹ்ரைன் நாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள சர்வதேச கடல் எல்லைக்கு மேலாக புதிய விமான வழித்தடத்தினூடாகப் பறப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என உலக விமான சேவை முகவரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 05 ஆந் திகதி கட்டார் மீதான தடை அறிவிக்கப்பட்டதிலிருந்து மொன்றியலை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சர்வ தேச சிவில் விமானப் போக்குவ ரத்து அமைப்பு கட்டாரில் பதிவு செய்யப்பட்டுள்ள விமானங்கள் பறப்பதற்கான நியாயபூர்வமான அணுகுமுறையொன்றினை உறு திப்படுத்திக் கொள்வதற்காக மத்திய கிழக்கின் பல நாடுகளுடன் பணியாற்றியது என சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் பேச்சாளர் அன்ரனி பில்பின் கடந்த செவ்வாயன்று தெரிவித்தார்.


வழக்கமான சில வான்வழிப் பாதையினை பயன்படுத்துவ தற்கான அனுமதி உறுதியளிக் கப்பட்டிருக்கும் அதேவேளை புதிய தற்காலிக அல்லது அவசரமான வான்வழிப்பா தையும் விருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொருளாதார மற்றும் இராஜ தந்திர தடையின் ஒர் அங்கமாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தமது வான்பரப்பில் கட்டார் விமான
சேவை விமானங்கள் பறப்ப தற்கு தடை விதித்ததனைத் தொடர்ந்து கட்டார் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் புதிய விமான வழித்தடங்களுக்கு அனுமதிய விக்குமாறு கோரிக்கை விடுத்தி ருந்தது.

வான்வழிப் பயண கட்டுப் பாடு 90 வீதமானவர்களை வெளிநாட்டவர்களாகக் கொண் டுள்ள கட்டாரின் 2.4 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருந்தது. ஏனெனில் நீண்ட தூரம் அதா வது தென்கிழக்காசியா வரை விமானத்தில் பயணிக்க வேண் டிய நிலை ஏற்பட்டிருந்தது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பும் சம் பந்தப்பட்ட நாடுகளும் விமான வழித்தட ஸ்திரத்தன்மை மற்றும் அவசியம் ஏற்பட்டால் மேலும் மாற்றங்களுக்கு உட்படக்கூடிய விமானப் போக்குவரத்து முகா மைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர இணக்கப் பாட்டிற்கு அமைவாக தொடர்ச் சியான கண்காணிப்பினை மேற்கொண்டு வருகின்றன என்று பில்பின் தெரிவித்தார்.


 புதிய வழித்தடம் தற்காலிக மானதாக இருந்தாலும் கட்டார் விமான சேவை பரந்த அளவில் தனது சிறகுகளை விரிப்பதற் கான நீண்டகாலத் தீர்வுக்கு நம்பிக்கையினை வழங்கி யுள்ளதாக விமான சேவை ஆலோசனை தந்திரோபாய வான்பயண ஆய்வு தலைமைப் பகுப்பாய்வாளர் ஸஜ் அஹமட் தெரிவித்தார். கட்டாரிலிருந்து வெளியேயும், வெளியில் இருந்து கட்டாருக் குமாக விமான சேவைகளில் 2017 ஜூன் மாதத்திற்கு முன்னர் இருந்த நிலை மீள ஏற்பட்டி ருப்பதாக என்னால் பார்க்க முடியவில்லை.

கட்டார் விமான சேவை சற்று அதிகமான வினைத்திறனுடன் பறப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முன்னர் ஐக்கிய அரபு அமீரக வான் பரப்பில் பறக்க முடி யாமல் இருந்தது என அஹமட் மேலும் தெரிவித்தார். கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கடந்த ஜூன் மாதம் குற்றம் சுமத்தியி ருந்தன. அக்குற்றச்சாட்டினை கட்டார் வன்மையாக நிராகரித்கதது.

 ஒர் அங்கமாக குறித்த நாடுகள் கட்டாரில் பதிவு செய்யப்பட்ட விமான சேவை விமானங்கள் தமது வான்பரப்பில் பறப்ப தற்குத் தடை விதித்தன. சவூதி தலைமையிலான பிர திநிதிகளுக்கும் மொன்றியலில் அமைந்துள்ள ஐ.நா. விமான சேவை முகவரக ஆளுகை சபைக்கும் இடையே மூடிய கதவுகளுக்குப் பின்னால் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சு வார்த்தையினைத் தொடர்ந்தே செவ்வாய்க்கிழமையன்று இந்த அறிவிப்பு வெளியானது. குறித்த கூட்டத்தில் பங்குபற் றியோர் இம்மாத ஆரம்பத்தில் எட்டப்பட்ட ஆரம்ப இணக்கப் பாட்டிற்கு அமைவாக திட்ட மிடப்பட்ட அவசர விமானப் பயண வழித்தடம் தொடர்பில் கலந்துரையாடினர்.

ஆனால் கட்டாரில் பதிவு செய்யப்பட்ட விமான சேவை விமானங்க ளுக்கு அது இதுவரை திறந்து விடப்படவில்லை. சவூதி அரேபியா தலைமையி லான நாடுகளால் கட்டாரின் சர் வதேச விமானங்கள் அவற்றின் வான்பரப்பில் பறப்பதற்கு தடை விதித்ததனைத் தொடர்ந்து சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிடம் இது தொடர்பில் தலையிடுமாறு கட்டார் கோரிக்கை விடுத்திருந்தது. இது கட்டாருக்குக் கிடைத்த வெற்றியாகும் என அறிக்கையொன்றில் தெரிவித்துள்ள கட்டார், சிவில் விமான சேவை அதிகாரசபை, ஆக்கிரமிப்பு நாடுகள் சிக்காக்கோ பிரகடனத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வலியுறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


இறுக்கம் தளர்கிறது...கட்டார் விமான சேவைக்கு UAE மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் பாதைகளை திறந்துவிட்டன. இறுக்கம் தளர்கிறது...கட்டார் விமான சேவைக்கு UAE மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள்  பாதைகளை திறந்துவிட்டன. Reviewed by Madawala News on 8/11/2017 02:16:00 PM Rating: 5