tg travels

வருமானத்தை அதிகரித்து கடனை செலுத்தக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது..

அடுத்த வருடம் மிகவும் கஷ்டமான வருடம் எனவும் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலேயே அதிகமாக கடன் செலுத்தப்பட வேண்டியுள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம, தியகமவில் அமைந்துள்ள மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வருமானத்தை அதிகரித்து கடனை செலுத்தக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

எனினும் கல்வி, உயர்கல்வி, சுகாதார துறையை முன்னேற்ற தொடர்ந்தும் கடனை பெறவேண்டியுள்ளது.


கடனை பெற்று அதனை கல்வி உள்ளிட்ட துறைகளில் அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். 


பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமே அதனை செய்ய முடியும். 13 ஆம் ஆண்டு வரை கல்வியை கட்டாயமாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். 


அடுத்த இரண்டு ஆண்டுகளில் 13 ஆம் ஆண்டு வரை கல்வி கட்டாயமாக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வருமானத்தை அதிகரித்து கடனை செலுத்தக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.. வருமானத்தை அதிகரித்து கடனை செலுத்தக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.. Reviewed by Madawala News on 8/10/2017 09:43:00 PM Rating: 5