Kidny

Kidny

மஹிந்த கால மோசடிகள் துரிதமாக விசாரணை !


மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்ற பாரிய மோசடிகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக மேல் நீதிமன்றங்களின் தொகையை அதிகரிக்கவும், சில நீதிமன்றங் களை டிரயல் அட்பார் விசாரணை நீதிமன்றங்களாக மாற்றவும் அமைச் சரவையில் உடன்பாடு எட்டப்பட் டிருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார்.

இதனூடாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் குவிந்துள்ள மோசடி வழக்குகளை துரிதப்படுத்த முடியும் என்று குறிப் பிட்ட அவர் அரசியலமைப்பை கார ணங்காட்டி இந்த நடவடிக்கைகளை இழுத்தடிக்க சிலர் முயன்றதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்க ளத்தில் நடைபெற்றது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தாமதமாவது பற்றி இங்கு வினவப் பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த விடயம் குறித்து விரிவாக ஆரா யப்பட்டது.

கடந்த கால மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணை களுக்கு நீண்ட காலம் பிடிக்கிறது. சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 101 மோசடிகள் தொடர்பான கோப் புகள் கையளிக்கப்பட்டுள்ளன. இதில் நிதி மோசடி பிரிவினூடாக வழங்கப்பட்ட 87 வழக்குகளும் சி.ஐ.டியினூடாக கையளிக்கப்பட்ட 14 வழக்குகளும் அடங்கும்.

இவற்றில் 25 மோசடிகள் தொடர்பில் மேலும் ஆதாரங்கள் தேவைப்படுவ தாக சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாறு குவிந் துள்ள வழக்குகளை துரிதப்படுத்து வது கடினமாகும். இதற்காக விசேட மேல் நீதிமன்றங்கள் அமைப்பதானால் யாப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.

ஆனால் இருக்கும் மேல் நீதி மன்றங்களில் ஒரிரண்டை டிரயல் அட்பார் நீதிமன்றங்களாக மாற்றி தினமும் விசாரித்தால் 2 மாதங்களில் வழக்கு விசாரணையை பூர்த்தி செய் யமுடியும் என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தவிர நீதிமன்றங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும்.

விசேட நீதிமன்றம் உருவாக்கப்படப்போவதாக தெரிவிக்கப்படும் செய்திகள் தவறா னவை.இதற்காக அரசதரப்பு சட்டத் தரணிகள் போதுமாக இல்லாவிட் டால் தனியார் சட்டத்தரணிகளையும் பயன்படுத்த முடியும். மேன்முறையீட்டு மற்றும் உச்ச நீதிமன்ற தொகையை அதிகரிக்கவே யாப்பு திருத்தம் தேவை. சில யாப்பு திருத்தம் தேவை என்று கூறி தமது நிர்வாணத்தை மறைக்க முயல்கிறார்கள்.

டிரயல் அட்பார் அமைக்க பிரதம நீதியரசரின் அனுமதி தேவை. சகல வழக்குகளையும் சட்டமாஅ திபர் திணைக்களத்தினூடாகவே முன்னெடுக்க வேண்டும் என பிர தமர் உத்தரவிட்டுள்ளதால் வழக்கு களை துரிதமாக முன்னெடுப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 சாதாரண முறைப்படி வழக்கு விசாரித்தால் 2020 ஆனாலும் விசாரணைகள் முடிவடையாது. ஒரு வழக்கு விசா ரிக்க 10 வருடங்களும் 2 மாதங்கள் தேவைப்படுகிறது.நாம் யோசனை தெரிவித்துள்ள முறையின் கீழ் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நடந்த மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்ய - இதற்கு அமைச்சரவையில் உடன் பாடு ஏற்பட்டது.

யாப்பை காரணம் காட்டி நீதிமன்றம் அமைப்பதை பின்போட முடியாது. ஒகஸ்ட் மாதத்தில் அரசியலில் பல திருப்பங்கள் நடைபெறும் என நான் கூறியது உண்மையாகி வரு கிறது. இனி பல திருப்பங்களை
காணலாம் என்றார்

மஹிந்த கால மோசடிகள் துரிதமாக விசாரணை ! மஹிந்த கால மோசடிகள் துரிதமாக விசாரணை ! Reviewed by Madawala News on 8/17/2017 08:49:00 AM Rating: 5