tg travels

கூட்டு எதிரணியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு அகவை 40 என்பதால்,  அவரை வாழ்த்தும் விசேட நிகழ்வு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், ஒன்றிணைந்த கூட்டு  எதிரணியின் சில உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில், இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைத் தந்திருந்த போது, எதிரணியின் உறுப்பினர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரதமரை வாழ்த்தும் முகமாக,  சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுதிரண்டிருந்ததாக தெரியவருகிறது.
கூட்டு எதிரணியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து.  கூட்டு  எதிரணியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து. Reviewed by Madawala News on 8/04/2017 01:51:00 PM Rating: 5