Kidny

Kidny

உத்தரவாதமின்றி ஆதரவாக வாக்களித்தால் சமூகத்திற்கு துரோகம் செய்ததாக ஆகிவிடும்.


சிறுபான்மை பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான உத்தரவாதம் வழங்காவிட்டால் உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்ட மூலம் மீதான வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொள்ள நேரிடும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவா தத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் குளறுபடிகள் கொண்டதாகவே மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வாக் கெடுப்பிற்கு முன்னர் அமைச்சர் பைசர் முஸ்தபா எமக்கு சில உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.

உத்தரவாதமின்றி இதற்கு ஆதரவாக வாக்களித்தால் எமது சமூகத்திற்கு நியாயம் கிடைக்காமல் சமூகத்திற்கு துரோகம் செய்ததாக ஆகிவிடும்.

இதிலுள்ள குறைபாடுகளை நாம் பிரதமருக்கும் அமைச்சருக்கும்
முன்வைத்திருந்தோம். அவற்றுக்கு உத்தரவாதம் கிடைத்தாலும் அவை சட்டமூலத்தில் உள்வாங்கப்பவில்லை. எல்லை நிர்ண யித்தின் போது இனவிகிதாசாரம், சனத்தொகை செறிவு, பொருளாதார அபிவிருத்தி என்பனவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.


கடந்த ஆட்சியில் சம்பந்தப்பட் அமைச்சர் இருக்கையில் பெசில் ராஜபக்ஷ தான் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். இதில் பல
இனக்குழுக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழு நியமிக்கப்பட்டு குறைபாடுகள் ஆராயப்பட்டன. ஆனால் இன்னும் எல்லை நிர்ணயத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

தொகுதியின் பெயர், பல் உறுப்பினர் தொகுதி, தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. சில தொகுதிகளில் சிறுபான்மையினருக்கு அநீதி ஏற்படும். தேர்தல் முறை மாற்றத்தின் போது மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.

சிறுபான்மைக்கு நியாய மான பிரதிநிதித்துவம் தேவைப்படு கிறது. இது தொடர்பில் அரசாங்கம் வழங்கும் உத்தரவாத்திற்கு அமையவே
சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என முடிவு செய்ய முடியும்.

சம்மாந்துறையில் 40 ஆயிரம் பேர் இருந்தாலும் 10 உறுப்பினர்களே தெரிவாக உள்ளனர். தெஹியத்த கன்டியவிலும் அதே அளவு மக்கள் இருந்தாலும் அங்கிருந்து 23 உறுப்பி னர்கள் தெரிவாக உள்ளனர். இவ்வா றான முரண்பாடுகள் காணப்படுகின் றன.

இவை தொடர்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். உறுப்பினர் தொகையை அதிகரிக்கும் அதிகா ரம் தங்களுக்கில்லை என எல்லை நிர்ணய குழு தலைவர் பிரிஸ் கூறியி ருந்தார். முசலி பிரதேச சபை உறுப் பினர் தொகை தொடர்பிலும் பிரச் சினை உள்ளது. பழைய முறையின்
கீழ் அதிக முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவான பிரதேசங்களில் புதிய சட் டத்தினூடாக குறைவடையும். அரசாங்கம் துரிதமாக தேர்தலை நடத்த வேண்டும்.

 பெண் பிரதிநிதித் துவம் அதிகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. மாகாண சபை மற்றும் பாராளு மன்றத்திலும் பெண்களின் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

எனவே சிறுபான்மை பிரதிநிதித் துவம் தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான உத்தரவாதம் வழங்கா விட்டால் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொள்ள நேரிடும். முரண் பாடுகளுடன் சட்டத்தை நிறைவேற் றிய பின்னர் மக்களின் முன்னிலை யில் செல்ல முடியாது.

உத்தரவாதமின்றி ஆதரவாக வாக்களித்தால் சமூகத்திற்கு துரோகம் செய்ததாக ஆகிவிடும். உத்தரவாதமின்றி ஆதரவாக வாக்களித்தால் சமூகத்திற்கு துரோகம் செய்ததாக ஆகிவிடும். Reviewed by Madawala News on 8/25/2017 11:52:00 AM Rating: 5