Kidny

Kidny

கிண்ணியா புதிய உலமா சபைக்கு வாழ்த்துக்களும், ஆலோசனையும்:Riyals Kinniyans அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி


கிண்ணியா இலங்கை முஸ்லீம்களின் இதயம் போன்றது இதை வழிநடாத்த ஆரோக்கியமான உலமாக்களை உள்ளடக்கிய உலமா சபை தேவை.அல்லாஹ்வின் உதவியால் அது இம்முறை கிடைக்கப் பெற்றுள்ளது என எண்ணுகின்றோம் இதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்பு இங்கு உள்ள உலமாக்களையும் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் தவ்வா அமைப்புக்களையும் சாரும் ஆகையால் எமது முதல் ஆலோசனையாக எமது கிண்ணியாவுக்கு சகல வசதிகளையும் கொண்ட பொதுவான தவ்வா மையம் தேவை.

இதை அமைத்து இதனூடாகவே சகல மார்க்க நடவடிக்கைகளும் பிரச்சாரங்களும் செய்யப்படவேண்டும் இது தவரும் பட்சத்தில் கிண்ணியாவின் நிலை மேலும் பல பிரிவுகளாக பிரிந்து மோசமான நிலைக்கு செல்லும் என்பதை கீழ் உள்ள அல் குர்ஆன் வசனத்துடன் அறியத்தருகிறோம்

"தங்கள் மார்க்கத்தை (பலவாறாக) ப் பிரித்து பல பிரிவினர்களாக ஆகி விட்டனரே அத்தகையோரில் நீங்கள் ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்து ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடமுள்ள (தவறான)தைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக இருக்கின்றனர்" (ஸூறா அர்ரூம்:32)

கிண்ணியா உலமா சபை எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க இறைவன் துனை புரிவானாக.. 

ஆமீன்


கிண்ணியா புதிய உலமா சபைக்கு வாழ்த்துக்களும், ஆலோசனையும்:Riyals Kinniyans அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி கிண்ணியா புதிய உலமா சபைக்கு வாழ்த்துக்களும், ஆலோசனையும்:Riyals Kinniyans அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.றாபி Reviewed by Madawala News on 8/18/2017 12:19:00 AM Rating: 5