Yahya

குழம்­பிய குட்­டையில் மீன்­பி­டிப்­ப­வர்­களின் முயற்­சி­களை முறி­ய­டித்து, உள்ளூராட்சி தேர்­தலில் புதி­ய­தொரு மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும்.


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் இன நல்­லு­றவைப் பேணும் வகை­யி­லான புரிந்­து­ணர்வு அர­சியல் தளத்தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கி­ன்றன. இப்­ப­டி­யான நிலையில் குழம்­பிய குட்­டையில் மீன்­பி­டிப்­ப­வர்­களின் முயற்­சி­களை முறி­ய­டித்து, அடுத்­து­வரும் உள்­ளூராட்சி தேர்­தலில் புதி­ய­தொரு மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மன்னார், சிலா­வத்­து­றை­யி­லுள்ள அரிப்பு பிர­தே­சத்தில் 700 குடும்­பங்கள் பயன்­பெறும் குடிநீர் சுத்­தி­க­ரிப்பு தொகு­தியை வழங்­கி­வைத்த பின்னர், அங்கு நேற்று நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது,

முசலி பிர­தேச சபையின் ஆட்சி அதி­காரம் என்­பது அர­சி­யலை புரிந்­து­ணர்­வு­டனும், தூர­நோக்­கு­டனும் கையா­ளக்­கூ­டி­ய­வர்­களின் கைக­களில் போக­வேண்டும். இந்த அதி­காரம் காட்­டு­தர்பார் அர­சியல் செய்­ப­வர்­களின் போய்­விட்டால், இன நல்­லி­ணக்­கதை இன்னும் சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கையை செய்­ப­வர்­க­ளாக நாங்கள் மாறி­வி­டுவோம். விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­ப­டு­கின்ற, ஆட்சி அதி­கா­ரங்­களை பகிர்ந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளாக நாங்கள் மாற­வேண்டும். அதற்­கான தீவிர முயற்­சியில் நாங்கள் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறோம்.

பாரா­ளு­மன்றம் மற்றும் மாகா­ண­சபை மட்­டத்தில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சிறந்த முறையில் பேச்­சு­வார்த்தை நடத்தி, சில முன்­னெ­டுப்­பு­களை சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கிறோம். இந்தப் பண்­பாடு உள்­ளு­ராட்சி மட்­டத்­திலும் விரி­வாக்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு பிர­தேச மக்­களும் பூரண ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்டும்.

யுத்­தத்தின் பின்னர் அடிப்­படை வச­தி­க­ளுடன் கூடிய மீள்­கு­டி­யேற்­றத்­திலும், வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைளில் அரசு தீவிர கவனம் செலுத்­த­வேண்டும். இப்­பி­ர­தேசம் மீனவ கிரா­ம­மாக இருக்­கின்ற காரத்­தினால், மீன்­பிடி தொழிலை மேம்­ப­டுத்தும் நட­வ­டிக்­களை நாங்கள் மேற்­கொள்ள வேண்டும்.

சிலா­வத்­து­றையில் ஒரு நகர அபி­வி­ருத்தி திட்­டத்தை ஆரம்­பிக்­க­வேண்டும். அத­னுடன் சேர்ந்து அரு­கி­லுள்ள அல்­லி­ராணிக் கோட்­டையை கட­ல­ரிப்­பி­லி­ருந்து பாது­காப்­ப­துடன், அப்­பி­ர­தே­சத்தை ஒரு சுற்­று­லாத்­த­ள­மாக மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இது­தொ­டர்பில் தொல்­பொ­ரு­ளியில் திணைக்­களம் மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்­சுடன் பேச­வுள்ளோம்.

முழு மன்னார் மாவட்­டத்­துக்கும் குடிநீர் வழங்கும் திட்­ட­மொன்றை ஒரு நிறு­வனம் தயா­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. வியா­ய­டிக்­கு­ளத்­தி­லி­ருந்து நீரை சுத்­தி­க­ரித்து முசலி பிர­தே­சத்­துக்கு வழங்­கு­வ­தற்கும், மாரி காலத்தில் மாத்­திரம் நீர் செல்­கின்ற கல்­லாறு ஆற்­றுக்கு குறுக்­காக நீர்த்­தேக்கம் அமைப்­ப­தற்கும் இரண்டு மாற்று யோச­னை­க­ளையும் நாங்கள் தீவி­ர­மாக பரி­சீ­லித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம்.

மன்னார், வவு­னியா, புத்­தளம் ஆகிய நக­ரங்­களை உள்­ள­டக்­கிய உலர் வலய நகர நீர் வழங்கல் திட்­டத்தின் முதற்­கட்­டத்தை நாங்கள் அண்­மையில் எழுத்­தூரில் பிர­தமர் தலை­மையில் ஆரம்­பித்­து­வைத்தோம். அதன் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. வவு­னி­யாவில் மல்­வத்து ஓயா­வுக்கு குறுக்­காக நீர்த்­தேக்கம் அமைத்து, மன்னார் மற்றும் வவு­னி­யா­வுக்கு நீர் வழங்கும் பாரிய நீர்­வ­ழங்கல் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளோம். இது­த­விர, பாவற்­கு­ளத்தில் நீரைப்­பெற்று குடிநீர் வழங்கும் முயற்­சி­க­ளிலும் ஈடுபட்டுக்;கொண்டிருக்கிறோம்.

முல்லைத்தீவில் நாளை (31) புதிய குடிநீர் வழங்கல் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். உலக வங்கியின் நிதியில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தை ஒரு வருடத்துக்குள் பூர்த்திசெய்வதற்கு தீர்மானித்துள்ளோம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற நாங்கள், பாரபட்சமின்றி நாட்டிலுள்ள எல்லா மக்களும் பயனடையும் வகையில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டு வருகிறோம்.
குழம்­பிய குட்­டையில் மீன்­பி­டிப்­ப­வர்­களின் முயற்­சி­களை முறி­ய­டித்து, உள்ளூராட்சி தேர்­தலில் புதி­ய­தொரு மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும். குழம்­பிய குட்­டையில் மீன்­பி­டிப்­ப­வர்­களின் முயற்­சி­களை முறி­ய­டித்து, உள்ளூராட்சி தேர்­தலில் புதி­ய­தொரு மாற்­றத்தை கொண்­டு­வ­ர­வேண்டும். Reviewed by Madawala News on 8/31/2017 01:47:00 PM Rating: 5