Kidny

Kidny

Sad News.. நாம் பலரும் வைத்திய செலவுக்கு உதவி செய்த பாத்திமா சல்ஹா சிகிச்சை பலனின்றி வபாத்தானார்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,

சில மாதங்களின் முன்னர், மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியொன்றின் காரணமாக (கன்சர்) மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  மாவனல்லை ஜனாப் நளீம் என்பவரின்  மகள் பாத்திமா சல்ஹா (வயது 3) வின் வைத்திய செலவுக்கு உதவி  கோரி இருந்தது வாசகர்கள் அறிந்ததே. இதனை அடுத்து பல வாசகர்கள் நிதி உதவிகளும் செய்திருந்தனர். 

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சில வாரங்கள் நினைவு திரும்பாமல் இருந்து நேற்று வபாத்தாகி விட்ட தகவலை அவரின் தந்தை கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

தன் மகளின் வைத்திய செலவுக்கு பல வழிகளிலும் உதவி செய்த அன்புள்ளங்களுக்கு தான் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாஸா நேற்றிரவு உயன்வத்த ஜும்மா பள்ளி வையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வஸ்ஸலாம்,
M.S.M.Naleem
Sad News.. நாம் பலரும் வைத்திய செலவுக்கு உதவி செய்த பாத்திமா சல்ஹா சிகிச்சை பலனின்றி வபாத்தானார். Sad News.. நாம் பலரும் வைத்திய செலவுக்கு உதவி செய்த பாத்திமா சல்ஹா சிகிச்சை பலனின்றி வபாத்தானார். Reviewed by Madawala News on 8/20/2017 02:20:00 PM Rating: 5