Kidny

Kidny

பலரது இதயங்களை பதற வைத்த ஜொஹ்ராவின் கண்ணீர்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

காஷ்மீரில் தாக்குதலில் பலியான சப் இன்ஸ்பெக்டரின்,  மகள் ஜொஹ்ரா கதறி அழும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பலரது இதயத்தையும் உருக்கியுள்ளது.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு அப்துல் ரஷீத் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்தார். 


திங்கள்கிழமை அவரது உடலுக்கு போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அப்துல் ரஷீதின் மகள் சிறுமி ஜொஹ்ரா கதறி அழுத காட்சி பலரையும் பதறவைத்துள்ளது.

இந்நிலையில் ஜொஹ்ரா கண்ணீர் சிந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை காணும் பலரும் ஜொஹ்ராவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே தெற்கு காஷ்மீரின் போலீஸ் டிஐஜி தனது பேஸ்புக் பதிவில் ‘‘இது ஏன் நடந்தது என்று புரிந்துகொள்ளும் வயது உனக்கு இல்லை. எங்களைப் போல போலீஸ்துறையில் பணியாற்றும் உன் தந்தை வீரத்திலும் தியாகத்திலும் முத்திரை பதித்துவிட்டார். உன் ஒவ்வொரு துளி கண்ணீரும் எங்கள் இதயத்தை உருக்குகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

பலரது இதயங்களை பதற வைத்த ஜொஹ்ராவின் கண்ணீர். பலரது இதயங்களை பதற வைத்த ஜொஹ்ராவின் கண்ணீர். Reviewed by Madawala News on 8/31/2017 07:34:00 AM Rating: 5