tg travels

இனிமேல் அவுஸ்திரேலிய அணியினர் எங்கள் மீது அதிக மரியாதை காட்டுவார்கள்.

 

பங்களாதேஷ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது.

 இதில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவை  பங்களாதேஷ் வீழ்த்தியது.

இந்த வெற்றிக்கு ஆல்ரவுண்டர் 
சாஹிப் அல் ஹசன் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததுடன் இரண்டு இன்னிங்சிலும் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பின்னர், ஆஸ்திரேலியா வெற்றி குறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்தவர்கள். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்த போட்டிக்குப் பிறகு அவர்கள் எங்கள் மீது அதிக மரியாதை காட்டுவார்கள்.

எங்களது சொந்த மண்ணில் எந்த அணியையும் வீழ்த்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த நம்பிக்கை இருந்து வருகிறது. எங்களது ஆட்டத்தை ஏராளமானவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், நாங்கள் எங்களுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறோம்’’ என்றார்.
இனிமேல் அவுஸ்திரேலிய அணியினர் எங்கள் மீது அதிக மரியாதை காட்டுவார்கள். இனிமேல் அவுஸ்திரேலிய அணியினர் எங்கள் மீது அதிக மரியாதை காட்டுவார்கள். Reviewed by Madawala News on 8/30/2017 08:25:00 PM Rating: 5