Kidny

Kidny

பயணிகளிடம் விற்பனை மோசடி செய்திக்கு கைமேல் பலன்... தகவலை கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி.


அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பஸ் தரிப்பு உணவகங்களில் குறித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பான முறைப்பாடுகள் இடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியரும் சட்டத்தரணியுமான ஹில்மி மவுறூப் அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அவர் உடனடியாக கிழக்கு மாகாண நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் அவர்களை தொடர்புகொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அணைத்து பஸ் தரிப்பு உணவகங்களிலும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததற்கு அமைவாக, அதற்க்கான அனுமதியினை மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளையினை பெற்றுக்கொண்டு கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஓட்டமாவடி, நாவலடி, றிதிதென்னை, வெருகல் ஆகிய பிரதேசங்களில் உள்ள வியாபார தளங்கள் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 12 வியாபார தளங்களில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்ட மீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சட்ட மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்ட வியாபார தளங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தை மீறுய வியாபார ஸ்தளங்கள் அனைத்துமே ஏற்கனவே நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டு   எச்சரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது என கிழக்கு மாகாண நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உதவி பணிப்பாளUம் மட்டக்களப்பு மாவட்ட பொறுபதிகாரியுமான ஆர்.எப்.அன்வர்
சதாத்குறிப்பிட்டார்.


நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியரும் சட்டத்தரணியுமான ஹில்மி மவுறூப் கூறுகையில் நுகர்வோரை பாதிக்கின்ற எந்தவொரு விடயமாக இருந்தாலும் அந்தந்த வியாபார தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் எதிர்காலத்தில் இவ்வாரான பிரச்சனைகளை தவிர்பதற்காகவேண்டி நுகர்வோர் விழிப்புணர்வுகள் சம்பந்தமாக பல்வேறு செயல்திட்டங்களையும் நடைமுறை படுத்தவுள்ளதாகவும்,

இவ்வாறான முறைப்பாடுகளை முறையீடு செய்வதற்கு நுகர்வோர் ஹொட்லைன் 1977 மற்றும் தொலைபசி இலக்கம் 0770110096 ஊடக கிழக்கு மாகாண நுகர்வோர்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் எனவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியரும் சட்டத்தரணியுமான ஹில்மி மவுறூப் தெரிவித்தார்.

பயணிகளிடம் விற்பனை மோசடி செய்திக்கு கைமேல் பலன்... தகவலை கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி. பயணிகளிடம்  விற்பனை மோசடி செய்திக்கு கைமேல் பலன்... தகவலை கொண்டு சென்ற அனைவருக்கும் நன்றி. Reviewed by Madawala News on 8/18/2017 12:09:00 AM Rating: 5