Kidny

Kidny

வீடுகளில் பதுக்கி வைத்திருந்த மணலை எடுத்து செல்லும் போலீசார்..


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் வடமராட்சி  துன்னாலை  குடவத்தை மற்றும் வேம்பிராய் பகுதிகளில் திருட்டு மணலை ஏற்றிச் சென்று விற்பனைக்காக வீடுகளில் மறைத்து வைத்திருந்தவர்களின் வீடுகளில் இருந்த மணல்கள் கடந்த இரு நாட்களாக பருத்திதுறை  பொலிசார் டிப்பர்களில் ஏற்றுச் செல்கின்றனர்.

மேற்குறித்த  பகுதிகளில் வாழும் சிலர் வாகனங்களில் திருட்டு மணல்களை ஏற்றிச் சென்று வீடுகளில் மறைத்து வைத்து பின்னர் அதனை விற்பனை செய்வதாக  கிடைக்கப்பெற்ற     குறித்த பகுதிகள் முற்றுகையிட்டு தேடுதலும் இடல்பெற்றது.

இந்த நிலையில்  கடத்தல்கார்ர்கள் என சந்தேகிப்போரால் ஏற்றிவரப்பட்டு வீடுகளில் பதுக்கி வைத்திருந்த மணல்கள் பொலிசாரால் கடந்த இரு நாட்களாக ஏற்றிச் செல்லப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் குவிக்கப்படுகின்றன.

இவ்வாறு கைப்பற்றப்படும் மணல்கள் அனைத்தும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளதாக  பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பீ.ஆர் சமன் ஜெதிலக தெரிவித்தார்.

இவ்வாறு இடம்பெற்ற தேடுதல்களில் மொத்தமாக லொறிகள் 16 மோட்டார் சைக்கிள்கள் 15 உழவு இயந்திரம் 1 கப் வாகனங்கள் 2  கைப்பற்றிய பொலிசார் இவற்றுடன் தொடர்பு பட்ட சந்தேகத்தில் இப்பகுதியைச் சேர்ந்த 68 இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட 68 இளைஞர்களில் 38பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு ஏனைய 26 பேர் வரையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்  யாழ். வடமராட்சி கிழக்கினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மண் கடத்தல் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர். றஞ்ஜித் மாசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த மேற்பார்வையில்  வல்வெட்டித்துறை நெல்லியடி பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை இணைத்து வடமராட்சி பகுதிகளில் இரவு பகல் நேர ரோந்துக் கடமையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .

 இதற்காக  மேலதிக  விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புத் தேவைக்காக பயன்படுத்தப்பட்டனர்.

கடந்த   26 ஆண்டு யுத்த காலத்தின் போது யாழ். குடாநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்ததது. அக்காலப்பகுதியில் மண் கடத்தல்காரர்கள் எந்தவித தங்கு தடையின்றி கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது சட்டம் ஒழுங்கு நன்றாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையே கடந்த மாதம் வடமராட்சி பகுதியில் ஏற்பட்ட அசாதரண சம்பவத்திற்கு காரணம் என்று கூறமுடியும்.

எனினும் தற்போது இப் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த மண் கடத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பலர் ஊரை விட்டுத் தலைமறைவாகியுள்ளதனால் அவர்களைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக' சமன் ஜயதிலக மேலும் தெரிவித்தார்.
வீடுகளில் பதுக்கி வைத்திருந்த மணலை எடுத்து செல்லும் போலீசார்.. வீடுகளில் பதுக்கி வைத்திருந்த மணலை எடுத்து செல்லும் போலீசார்.. Reviewed by Madawala News on 8/14/2017 03:03:00 PM Rating: 5